நிழலும் நானும் கடந்து வந்த சோகம்

நிழலும் நானும் கடந்து வந்த காலம் மறைந்திருந்த சோகம் மனிதர்கள் அறியாத நேரம் மனத்திற்கோ துன்பம் உணர்விளோ கோபம் வெளியிளோ இன்பம் என்றே வாழ்க்கை அமைந்துவிட்டது.

வயது அதிகரிக்கும் பொழுது மனிதன் புதுபுது விதமான அனுபவங்களை ஒவ்வொரு அத்தியாயங்களாகக் கற்றுக்கொள்கிறான் என்பதே உண்மை ஆனால் அதை மனிதன் அறிந்திருப்பதில்லை !

காணும் கனவெல்லாம் நனவாக நடப்பதில்லை என்பதை மனிதன் ஒருபோதும் ஏற்பதில்லை ஏனெனில் கனவு எனும் கற்பனையில் மூழ்கிக்கிடக்கும் மனிதனாக, மனிதன் வாழ்கிறான்.

உள்ளத்தில் ஒளிந்து கிடக்கும் நல்ல உணர்வுகளை தேடியடுத்து அதைக்கொண்டு நற்காரியங்களை செய்து சமூகத்திடத்தில் நல்லதொரு பெயரை தனக்கு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

இருண்ட உலகம் சுருண்ட வாழ்க்கை என்ற கோட்பாட்டில் மனிதன் வாழ்கிறான் என்பதை மனிதனே மறந்து விடுகிறான் அதனாலேயே பாவங்களை மனிதன் அதிகளவில் செய்துவிடுகிறான்.

எழுதியவர் : அப்துல் ஹமீட் (7-Sep-16, 10:51 am)
சேர்த்தது : அப்துல் ஹமீட்
பார்வை : 89

மேலே