இறைவனுக்கு ஓர் கடிதம் .,
அன்பு இறைவா வணக்கம் ,
உன் படைப்பால் இங்கு யாவும் அதிசயமே ஆயினும் உன் நலம் அறிய ஆவல்.,
நீர் அனுப்பிய சோதனைகள் வந்து சேர்ந்தது .,மிக்க
மகிழ்ச்சி.,அந்த சோதனைகள் ஒவ்வொன்றும் அனுதினம் உன்னை நினைவுக்கொள்ள செய்கிறது .,
அந்த நினைவுகள் எல்லாம் உன்னை என் அருகில் வைத்துக்கொள்ள உதவுகின்றது .,
உனக்கு என்மேல் எவ்வளோ பாசம் என்பதை நீர் அனுப்பும் பரிசுகளே நினைவுப்படுத்துகிறது
நீர் என்னை விட்டு எவ்வளோ தூரம் இருந்தாலும் என்மீது உன்னக்கு தனி அன்புதான் .,அதேப்போல் என்னை என்றும் மறவாமல் உன் நினைவில் வைத்துககொள்கிறாய்,அதன் சாட்சியாக நீர் அனுப்பும் கஷ்டம்,துன்பம் போன்ற பரிசுகள் என்னக்கு தெரியபடுத்துகின்றது
எப்பொழுது நீ இங்கு வருவாய் .,என்னோடு ஒரு சில நாட்கள் தங்கிவிட்டு போ.,நீர் அனுப்பிய பரிசுகள் எல்லாம் எப்படி உள்ளது என்பதை தெரிந்துக்கொள்வாய்
வரும்போது நீ என்னிடமிருந்து எடுத்து சென்ற நிம்மதி பரிசை கொண்டுவா .,நீ இங்கு இருக்கும் வரை .,அந்த சில நாட்களாவது அதை நான் பார்க்க விரும்புகிறேன்.,
இப்படிக்கு உன் வரவை எதிர் நோக்கும் ஓர்
மனிதப்பிறவி.,