என்னுயிர்த் தோழி

பழக்கமில்லா ஒரு முகம்
விடுதியில்தான் அறிமுகம்
சந்தித்து சற்று நிமிடங்களே கடந்திருக்க கூடும்
விடை பெற்று செல்ல காத்திருந்தனர் என் பெற்றோர்
வாசல் வரை என்னுடன் வந்து வழியனுப்பினாள்
ஒரு வேளை அன்று நான் தனித்திருந்திருந்தால்
நிச்சயம் அங்கு அழுகை வெடித்திருக்கும்.
கண்கள் கலங்கி நான் நிற்க
அருகில் நின்று என் அழுகைக்கு அணைபோட்டவள் அவளே!
அன்று தொடங்கி இன்று வரை!!