மறுபிறவி

ஆன்மா என்பது உருவமற்ற சாசுவதமாக ஒரு உடலில் இருந்து இறப்பினூடாக இன்னொரு உடலுக்கு மாறிக்கொண்டிருக்கக் கூடியது. அதை சக்தியென்றும் கருதலாம். எப்படி எலத்திரன் ஒரு ஆணவில் இருந்து வெளியேறி Nவுறு அணுவுடன் போய் சேர்ந்து கொள்கிறதோ அது போன்றது ஆன்மாவும். இந்த ஆன்மாவின் மாற்றததை மறு பிறவி என்பர். உடலும் ஆன்மாவும் ஒன்றிணைந்து செயல்படும் போது பிறவியாகிறது. இது மனிதப் பிறவியாக மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை. பிறவியானது மனிதப்பிறவியை தவிர்த்து புல்லாக இருக்கலாம் , மரமாக இருக்கலாம், மிருகமாக இருக்கலாம், பறவையாகவும் இருக்கலாம். இதனை மாணிக்கவாசகர் அருமையாக திருவாசகத்தில் எடுத்துச்சொல்லியுள்ளார். ஆன்மாவே உடலை செயல்படவைக்கிறது. ஆகவே உடலை இயக்கும் சக்தியெனலாம். சிந்தனைக்கும் உடல் செயல்படுவதற்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஆகவே ஆன்மாவின் தன்மை சிந்தனைகளில் தங்கிருக்கிறது. ஒரு பிறவியில் பூண்டாகி வளர்ந்து, பெரியமரமாகி பின்னர் காலப்போக்கில் சிதைந்து போகும் போது அதன் ஆன்மா வேறு பிறவி எடுக்கும் போது திரும்பவும் மரமாக இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. மிருகமாகவோ, பறவையாகவோ அல்லது பூச்சி புழுக்களாகவோ கூட இருக்கலாம்.

போலாந்து நாட்டைச் சேர்ந்த சிறுமி ஒருத்தி தான் மூன்று வயதாக இருக்கும் போது எதுவித பயிற்ச்சியுமின்றி வயலினை கையில் எடுத்து இசை மீட்கக் கூடியதாக இருந்ததது. அந்த வியப்புக்குரிய அவளின் செயலபாட்டினை தொட்ட குறை விட்ட குறை என்ற தத்துவத்தால் விளக்கமுடியும். சென்ற பிறவியில் எந்தச் செயல்பாட்டில் ஆசை வைத்து பூர்த்தியாகாமல் இறந்தாலே அதனை இப்பிறவியில் தொடர்ந்து செய்யக் கூடியதாக இருக்கிறது என்பது ஒரு விளக்கம். தனது ஆன்மா 200 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆணின் உடலில் இருந்ததாகச் சொன்னாள்.
ஜெட்சுன்மா என்ற பெண்ணின் அனுபவம் இஆத போனறு முற்பிறவியின் தொடர்கதையாகும். அமெரிக்காவில் நியூயோர்க நகரத்தில் உள்ள புரூக்லீன் பகுதியில் சாதாரண குடம்பத்தில் பிறந்தவள் இப்பெண். தாய் ஒரு பலசரக்கு கடையில் வேலை செய்யும் யூதப் பெண. கணவன் இறந்தவுடன் பெரும் வாகனங்களை ஓட்டும் இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்கரை திருமணம் செய்தார். இருவரும் மதுவிற்கு அடிமையானார்கள். மகளை அடித்துத் துன்புறுத்தினார்கள். தாய் தனது மத தலத்திற்கும் சிறியதகப்பன் தனது கத்தோலிக்க தேவாலயத்திற்கும் வற்புறுத்தி அழைத்துச்சென்றனர். 17வயதாக இருக்கும் போது, போலீசாரின் ஆலொசனையின் பேரில் பிறந்த வீட்டை விட்டு வேளியேறினாள். பின்னர் திருமணம் செய்து சில பிள்ளைகளுக்கு தயானாள். தானாகவே திபெத்து நாட்டு புத்தமதத்தை படிப்பி;க்கும் ஆற்றலைபெற்றாள். அவளிடம் அதைப்பற்றி பயில பலர் தேடிவந்தனர். அதுவரைக்கும் அவள் புத்தமத்ததைபற்றி ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. திபெத் நாடு எங்கிருங்கிருக்கிறது என்பது கூட அவளுக்குத் தெரியாது. “ புது வாழ்விற்கான கண்டுபிடிப்பின் மையம்” என்ற பெயரில் போதனைகளை நடத்தினாள். அவளுக்கோ அல்லது அவளிடம் பயி;னறவர்களுக்கோ தாம் படிப்பது திபெத்து நாட்டு புத்தமதம் என்பது தெரியவில்லலை. காலப்போக்கில் திபெத்து புத்த சன்னியாசி ஒருவரை சந்திக்க சந்தர்ப்பம் கிட்டியது. அதனால் திபெத் நாட்டுக்கு போக வேண்டி வந்தது. அதன் பி;ன்னரே தனது முற்பிறவியைப்பற்றி அவளுக்கு நினைவுக்கு வந்தது. சென்ற பிறவியில் தான் ஒரு திபெத் நாட்டு புத்த சன்னியாசியாக இருந்தாக அவள் சொன்னாள்.
இது போன்று பல மறு பிறிவிக் கதைகள் சிறீ லங்காவில் உண்டு. அதில் முக்கியமானது முன்னைய ஜனாதிபதி பிரேமதாசா மறுபிறவி எடுத்த கதை. தற்கொலைப் படையினரால் குண்டு வெடிப்பில் 1993ல் கொழும்பில், மேதினத்தன்று இறந்தவர் பிரேமதாசா. இவர் பௌத்தமத்தைச் சேர்ந்தவர். அதிகாலையில் எழும்பி புத்தமதத்தின் பன்சில என்ற மந்திரத்தை ஓதுவது அவர் வழக்கம். ஒரு கிராமத்தில் ரணசிங்க விஜயபாகு எனபவருக்கும் அவர்மனைவிக்கும் பிற்ந்த ஆண்குழந்தைக்குப் பெயர் சம்பத். இக்குழந்தையும் விசித்திரமாக அதிகாலையில் எழும்பி புத்தமதத்தின் பன்சிலவை ஓதத்தொடங்கியது. இக்குழந்தை பிரேமாதாசவின் மறு பிறவி என்ற வதந்தி ஊடகங்களில் பரவத் தோடங்கியது. பிரேமதாசா இறந்த இடத்திற்கு அக்குழந்தையை அழைத்துச் சென்ற போது கண்ணீர் விட்டதாக பார்த்தவர்கள்; தெரிவித்தனர். அடிக்கடி குழந்தை பிரேமதாசாவின் மனைவி பிரேமாவி;ன் பெயரை உச்சரித்ததை கவனித்தார்கள். பிரேமதாசாவுடன் பழகியவர்களை இலகுவாக அடையாளம் கண்டது குழந்தை. பிரேமதாச காலத்தில் நடந்த பல அரசியல் இரகசியங்களை குழந்தை சொல்லத் தொடங்கியது. அதனால் அக்குழந்தையின் பாதுகாப்பை பற்றி பெற்றோர் கவலைப்பட்டனர். இரண்டு வயது முதல் ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு தமது முற்பிறவியைப்பற்றிய ஞாபகங்கள் வருவது சகஜம்.

இந்து மதம் 5000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட வேதங்களில் மறுபிறவிக்கும் கர்மாவுக்கும் உள்ள தொடர்பினைப் பற்றி விளக்கியுள்ளது. கிழக்கு தேசஙகளாகிய இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் மக்கள் பி;ன்பற்றும் மதத்துடன் மறுபிறவிமேல் உள்ள நம்பிக்கை தொடர்புள்ளது. “ நாம் செய்த கர்ம பயன் நான் இப்படி பிறந்து அலுந்த வேண்டியிருக்கிறது” என்று பலர் சொல்வதை கேட்டிருக்கிறோம். இப்போது நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் எமது வருங்காலத்தை பாதிக்கிறது. செயலிலும் , சிந்தனையிலும் பேசும் வார்த்தைகளிலும், இருந்து கர்மா உருவாகிறது. எந்த செயலுக்கும் ஒரு எதிர்தாக்கமுண்டு என்ற கோட்பாட்டின் படி கர்மாவின் தத்துவம் இயங்குகிறது. உதாரணத்துக்கு பரீட்சையில் சித்தியடையாத மகனை பேசக் கூடாத வார்த்தைகளால் பேசியதால்; மனமுடைந்து அவன் தற்கொலை செய்தால் அக்கர்மா பேசியவரைப் பீடித்துக்கொள்கிறது. வாசலில் ஒரு பிச்சைக்காரன் பசியால் வாடுவதைப் பார்த்த ஒருவர் உனே அவன் பசியைப் போக்க பொதியளவுக்கு உணவு கொடுக்கிறார். அந்த நல்ல சிந்தனையும் செயலும் அவருக்கு நல்ல கர்மாவைத் தேடிக்கொடுக்கிறது.

முற்பிறவி எடுக்கும் ஆன்மாவுக்கு ஒரே நாட்டிலோ அல்லத இனத்திலோ அல்லது சாதியிலோ அல்லது ஒரு பாலிலோ பிறக்க வேண்டும் என்ற கட்டுப்பாடில்லை. சிறிலங்காவில் இறந்த ஒருவானின் ஆன்மா மத்திய கிழக்கு நாடொன்றில் கூட போய் அவதரிக்கலாம். கால எல்லையைப் பொறுத்தமட்டில் குறிய காலத்திலோ அல்லது வெகு காலத்திற்கு பின்னரோ நடைபெறலாம். அனேகமாக தற்கொலை, விபத்து மூலம் தீடிரென குறுகிய காலம் வாழ்ந்து இறந்த ஒருவரின் ஆன்மா உலக வாழ்வில் தனது வாழ்நாளை பூர்த்தி செய்யாத காரணத்தால் அடுத்த பிறவயை வெகு குறுகிய காலத்தில் எடுத்து செய்துமுடிக்கவெண்டியதை முடித்தபின்னர் மரணத்தை தழுவிக்கொள்கிறது. இதனை சுந்தரர், திருஞானசம்பந்தர் , மாணிக்கவாசகர் போன்று குறுகிய காலம் வாழ்ந்து தமது சமையச்சேவையை முடித்துவிட்டு போனவர்களிடம் இருந்து காணலாம். இதே போன்று மேதயான கணிதமேதை இராமனுஜமும் குறுகிய காலம் வாழ்நதவர். ஏன பாரதி கூட நி;ட காலம் வாழவிலலை. தான் இந்த உலகில எதைச் செ;ய்ய பிறந்தாரோ அதைச் செயது முடித்துவிட்டு இளம் வயதிலேயெ சிவபதம் அடைந்தார். மேற்கத்திய நாகளில் இசை மேதை மோசாட் ( 1756 – 1797), மொழி மேதை லூபெக் ( 1721 – 1740) போன்ற குழநதை பருவம் முதல் கொண்டு தமது அருந்திறமைகளை ( Pசழனபைல) காட்டிச் சென்றவர்களும் சொற்பகாலம் வாழ்ந்தவர்கள். இவர்கள் முற்பிறவியில் விட்ட குறைகளை மறுபிறவி எடுத்து பூர்த்திசெய்தவுடன் உலகைவிட்டுப் பிரிந்தவர்கள்.

கிறிஸ்தவ மதம் தோன்ற முன்னர் ஐரோப்பிய பூர்வ குடிமக்கள் , வட அமெரிக்க சிவப்பிந்தியர்கள், கிரேக்கர்கள், உரோமர்கள் மறுபிறவியல் நம்பிககை வைத்திருந்தனர். ஆனால் பழமையில் ஊறிய கிறிஸ்தவம் அந்த நம்பிக்கை வளரத் தடைவிதித்தது. ஆனால் கிறிஸ்தவ மதத்தின் சில கிளை இன்றும் மறுபிறவியில் நம்பிக்கை வைத்திருக்கின்றன. இதற்கு இந்தியாவில் உள்ள சீரிய நாட்டு கிறிஸ்தவ மதம் ஒரு உதாரணமாகும்.

ஐரோப்பிய பூர்வகுடிமக்களுக்கு முன்னர் வட அமெரி;க்காவின பூர்வகுடிமக்களான செவ்விந்தியர்கள் மறுபிறவியில் நம்பிக்கை உள்ளவர்களாக வாழ்ந்தார்கள். இன்றும் பழங்குடிமக்கள் கடைப்பிடிக்கும் மதங்களில் மறு பிறவிகளை நம்புகிறார்கள். இது தென் அமெரிக்கா, ஆபிரிக்கா, அவுஸ்திரேலியாவின் பூர்வ குடியினரான அப்போர்ஜினீஸ் இடையேயும் பசுபிக் சமுத்திரத்தில் உள்ள தீவுகளில் வாழும் குடியினரிடையேயும் நிலவுகிறது.

முற்காலத்தில் பூர்வ குடியினத்தின் தலைவர்கள் இறந்தபின்னர் அவர்களை கருப்பைக்குள் குழந்தை இருக்கும் நிலையில் அடக்கம் செய்வார்கள். அந்த நிலையில் அவர்களை அடக்கம் செய்வதன் முக்கிய காரணம் அடுத்த பிறவி எடுக்க அவர்களை ஆயத்தம் செய்வதேயாம். வாழ்வுக்குப் பி;ன இறப்பு அவசியம். முறுபிறவி எடுப்பதற்காக கிரிகைகள் மூலம் ஆன்மா அழியாமல் மறுபிறவி எடுக்க பாதுகாக்கப்படுகிறது என்கிறது சில மதங்கள்.

கிழக்கும் மேற்கும் மறுபிறவி என்ற தத்துவத்தில் வேறுபடுகிறது. கிழக்கில் இரு பிறவிகளுக்கிடையே உள்ள காலம் வித்தியாசம் குறைந்த காலமாகவோ அல்லது பல நூற்றாண்டு காலமாகவோ இருக்கலாம் என்கிறது. இக்காலமானது மறு பிறவி என்ற சக்கரத்தில் தங்கியுள்ளது. கிரேக்கரும் மேற்கத்தியவரும் மறுபிறவியானது ஒரு நேர்கோட்டில் குறுகிய நேரத்தில் இடம்பெறும் சம்பவமாகவே கருதுகிறார்கள். அதுவுமின்றி ஆன்மா ஒரு மனித உருவத்தில் இருந்து அடுத்த மனித உருவத்துக்கு சொற்பகால வித்தியாசத்தில் மாறிக்கொண்டு போவதாக கருதுகிறது. கர்மாவுக்கும் மறுபிறவிக்கும் தொடர்பு இல்லை என்பது மேற்கத்திய கோட்பாடாகும்.

பௌத்த மதம் ஒருவன் செய்த கர்மாவைப் பொறுத்தது மறுபிறவிஎன்கிறது. ஆன்மா ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு கூடு விட்டு கூடு பாயாவிடில் எவ்வாறு மறு பிறவி என்று நாம் கொள்ளலாம்? ஆன்மா இல்லாவிடில் நாம் எப்படி மறபிறவிகளைப்பற்றி பேசமுடீயும்? புத்தர் மனித வாழ்வினை ஐந்து தோகுதிகளாக வகுத்துள்ளார். அந்த ஐந்தையும் இரண்டு பிரிவுகளாகப் பிரித்தார். முதலாவது சடப்பொருiளான உடலை உள்ளடக்கும் வாழ்வு. இது சடப்பொருள் சக்தியை உள்ளடக்கியுள்ளது. மற்றது மனத்தொடு தோடர்புள்ளது. மனத்தால் நினைப்பதெல்லாம் நிரந்தராமக நிற்பதில்லை. சிலவற்றை மறந்துவிடுகிறோம். ஆனால் சில சிந்தனைகள் நிலைத்து நிற்கிறது. அந்த மனதில் தோன்றுவதை “சித்தாஸ்” என்பர். சித்தம் என்ற வார்த்தை இதில் இருந்து உதயமானது. சித்தம் தோன்றி உடைந்து மறைகிறது. ஒரு சித்தம் தோன்றி உடைந்து மறைந்தவுடன் இன்னொன்று உடனடியாகத்தொன்றுகிறது. இதனைத்தான் நாம் எண்ண அலைகள் என்கிறோம். இவ்வாறு மனமானது தொடர்நத சிந்தனைகளை உருவாக்கிறது. முதலில் தோன்றும் சிந்தனையால் ஏற்படும் தாக்கம் செயல்பாட்டின் பிரதிபலிப்பு இரண்டாவதில் பதிகிறது. ஆகவே நமது அனுபவம் இந்த சிந்தனைகளால் உருவாகும் செயல்பாடுகளின் பிம்மமே. உதாரணத்துக்கு கையில் பணமில்லை என சிந்திக்கிறோம். குடும்பத்துக்கு உணவுக்கு வழியல்லை என்பது அடுத்த சிந்தனை. பிள்ளைகன் பசியால் அழப்போகிறார்களே என்பது மூன்றாவது சிந்தனை. என்ன வழியல் இதனை நிவிர்த்தி செய்யலாம் என்பது தொடரும் அடுத்த சிந்தனை. வீதியல் போய் நி;ன்று பிச்சை எடுப்போம் என்பது அடுத்தது. இப்படித் தொடருகிறது சிந்தனைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து இயங்குகிறது. இந்த சிந்தனைகளி;ன பதிவுகள் நம்மனதில் தங்குகிறது. இதனால் நாம் அடையாளம் காணப்படுகிறோம். குறிப்பிட்ட உதாரணத்தில் வீதியோரப் பிச்சைக்காரனாக அவன் அடையாளம் காணப்படுகிறான். இது சிந்தனைகளி;ன் விளைவே. மனிதனின் குணம் செயலபாடு ஆகியவற்றை சிந்தனை தோற்றுவிக்கிறது. பௌத்தத்தில் இந்து மதத்தை போல் ஆன்மா கூடுவிட்டு கூடு பாய்கிறது என்ற கோட்பாடு கிடையாது. பௌத்தத்தில மரணத்திற்குபி;ன் சிந்தனைகள் தொடர்ச்சியாக திரும்பத் திரும்பத் தோடர்ச்சியாகத் தோன்றுகிறது எனப் பொருள்படும். அதனால் முதல் பிறப்பில் உள்ள சிந்தனைகள் அடுத்த பிறவியில் சித்தத்தின் மூலம் இணந்துள்ளது.

திபெத்தியன் பௌத்தத்;தில் சிந்தனையே மறு பிறவி எடுக்கிறது என்பது கருத்து. தலைலாமாக்கள எனப்படும் திபெத்திய பௌத்தத்தின் தலைவருக்கு தனது முற்பிறவியைப்பற்றி அறிந்துவைத்திருக்கும் வல்லமை உண்டு. ஒரு தலைலாமா இறந்தவுடன் மறுபிறவி எடுத்து தலைலாமாவை தேடிச்செல்வார்கள். ஆனால் சீன ஆக்கிரமிப்பின் பின் தேடுதல் முறையில் அரசியல் கலந்ததினால் புதிய தலைலாமா மறுபிறவி எடுத்தவரா என்பது சந்தேகத்திற்கு இடமளிக்கிறது.
சீக்கிய மதம் இந்து மதத்ததைப் போன்று மறுபிறவியினை கருதுகிறது. இறுதியல் ஆன்மா தனது மறுபிறவி எனும் சுற்றினை முடித்துக் கொண்டு இறைவனுடன் கலந்துவிடுகிறது என்கிறது இம்மதம்.

பலர் பல மறுபிறவிகள் எடுத்தும் முக்திபெறாது தொடர்ந்து பிறவி எடுக்கிறார்கள்.

கிரேக்க வரலாற்றாளர் ஹெரோடொட்டோவின் கருத்துப்படி எகிப்தியர்கள் கூட கூடுவிட்டு கூடு பாயும் ஆன்மாவின் தத்துவததை எடுத்துச்சொல்லியுள்ளார்கள். பல பிறவிகளை எடுத்து இறுதியாக மனிதப் பறிவியை ஆன்மா எடுப்தாகவும் .ந்த மநு மறுபிறவி சுழற்ச்சியானது 3000 வருடங்களும் எடுக்கும் என்பது பண்டைய கால எகிப்தியரின் நம்பிககை. அக்காலத்தில் எகிப்தியர்கள் கடைப்பிடித்த பல சடங்குமுறைகளும், இறந்த பின்னர் உடலை பக்குவப்படுத்தி விலையுயர்ந்த பொருட்களுடன் பிடமிட்டில் சமாதி நிலையில் அடக்கம் செய்யும் முறையும் மறுபிறவிமேல் அவர்கள் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிககைக்கு எடுத்துக்காட்டாகும். சில கல்லறைகளில் கோதுமைத் தானியததை இற்ந்தவர்களின் உடலுடன் வைத்திருந்தனர். காரணம் நல்ல மறுபிறவி எடுப்பதற்கு அது ஒரு சின்னமாகும். ஒசிரிஸ ( ழுளசளை) என்ற தெய்வத்திற்கு செய்யும் கிரிகைகளுடன் சம்பந்தப்பட்ட மறுபிறவியாகும்.

********8

எழுதியவர் : (பொன் குலேந்திரன்-– கனடா (8-Sep-16, 5:26 am)
Tanglish : marupiravi
பார்வை : 285

மேலே