kavithai
ஜெயம் அது நிச்சயம்
நேரம் தவறாமையும்
நேர்மை தவறாமையும்
பேச்சிலே கவனமும்
உயிர் மூச்சிலே முன்னேற்ற கனவும்
தோல்வியில் மன தைரியமும்
உறுதியான விடாமுயற்சியும்
தளர்வில்லா நம்பிக்கையும்
இடைவிடா உழைப்பும்
ஓய்வில்லா சிந்தனையும்
ஓங்கிய எண்ணமும் - இவையாவும்
என் மனதில் திண்ணமாக கொண்டு
இன்றைய படிப்பை எனும் பணியை
தேன் சுவை கனிபோல்
தொடங்குவேன் .