என் பயணங்களில் நீ

என் தொலை தூர பயணங்களில்
என் வாசிப்பு கவிதையாகி போனாய்
என் நடை பயணங்களில்
என் நிழலாகி போனாய்
என் பேருந்து பயணங்களில்
என் ஐன்னல் ஓர காட்சியாகி போனாய்
என் மிதிவண்டி பயணங்களில்
என் தோழியாகி போனாய்
என் ரயில் பயணங்களில்
என் உறவாகி போனாய்
என் வானூர்தி பயணங்களில்
என் காற்றாகி போனாய்
மொத்ததில் என் பயணங்களில் எல்லாம்
என்னோடு சேர்ந்து நீயும் பயணத்தாய்.....