மெய்யன் நடராஜின் நல்லசொற்கள் தீஞ்சுவை யே
இலங்கை மெய்யன் நடராஜின் 'மாற்றான் தோட்டத்தில் என் மல்லிகை' எண்சீர் விருத்தங்களைப் பாராட்டி,
ஒரு விகற்ப நேரிசை வெண்பா
எல்லோர்க்கும் வந்து விடுவதில்லை நற்கவிதை;
சொல்லிவிடும் எண்சீர் விருத்தங்கள் - எல்லாமே
வில்போன்று தங்களெண் ணத்தில் வனைந்துவரும்
நல்லசொற்கள் தீஞ்சுவை யே!
கலி விருத்தம்
எல்லோர்க்கும் வந்து விடுவதில்லை நற்கவிதை;
சொல்லிவிடும் எண்சீர் விருத்தங்கள் அத்தனையும்
வில்போன்று தங்கள் எண்ணத்தில் வனைந்துவரும்
நல்லநல்ல சொற்கள் தித்திக்கும் நெஞ்சமதில்!
கலித்துறை
எல்லோர்க்கும் தானே வந்து விடுவதில்லை நற்கவிதை;
சொல்லிவிடும் உந்தன் எண்சீர் விருத்தங்கள் அத்தனையும்
வில்போல்தா னென்றும் தங்கள் எண்ணமதில் வளைந்துவிழும்
நல்லநல்ல தேன்போல் சொற்கள் தீஞ்சுவைதான் நெஞ்சமதில்!