உதிரா முத்துக்கொடி
இடப்புற இடையில்
இலக்கியக் கொடி !
வலப்புற இடையில்
வஞ்சிக் கொடி !
அசைந்து வருகையில்
தாமரைக் கொடி
இதழ்களில் மின்னும்
புன்னகை மின்னல் கொடி !
மன்னன் என் மார்பில்
தழுவும் மாதவிக் கொடி !
புன்னகையில் பூங்கொடி
சினத்தில் சின்ன புரட்சிக் கொடி
முத்தத்தில் உதிரா முத்துக் கொடி
சிந்தனையில் கவிதைக் கொடி
கற்பனையில் வான் நீலக் கொடி
கைகோர்த்து நடக்கையில் கவின் காதல் கொடி
முழுநிலவுக்கும் மோகம் தரும் வெண்ணிலாக் கொடி
மூச்சினை நிறுத்திடும் மோககக் கொடி
போதுமா போதுமா சொல்லடி
கல்லில் வடித்தால் சிலையடி
சொல் தமிழில் வடித்தால் வெண்பாவடி
வெண் பளிங்கில் அற்புதச் சிலையடி
மெழுகிலும் டுசாட்டின் அழகுப் பொம்மையடி
கயல் நீந்தும் விழியடி
கனவில் வரும் சுனாமிப் புயலடி
என் கரம் எழுதியே செல்கிறதே .....
போதும் என்று சொல்லடி
கொடியவளே என் பூங் கொடியவளே !
-----கவின் சாரலன்