பாசம்

முத்தான மூன்றெழுத்து மந்திரமாம்
மூச்சோடு கலந்திட்ட உணர்வலையாம்
கருவறையில் தோன்றிடும் பாசம் ...

பகைவரையும் நண்பராக்கும் தந்திரமாம்
பலபேரை இணைத்திடும் இயந்திரமாம்
குருதியில் கலந்திட்ட பாசம் .....

இடுகாடு செல்லும்வரை ஈர்த்திடுமாம்
இதயங்கள் அணிவகுத்து வந்திடுமாம்
கண்ணீரை வரவழைக்கும் பாசம் ....

ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் பாலமாம்
அளவிலா அன்பால் அரவணைக்குமாம்
வற்றாத ஜீவநதியாய் பாசம் ....

பாசமுடன் பழகிட்டால் பாரினில்
சாதிமத வேற்றுமைகள் மறந்திடும்
சமத்துவ சமுதாயமும் மலர்ந்திடும் !

பாசமுடன் வாழ்வோம் உள்ளவரை !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (9-Sep-16, 10:14 pm)
Tanglish : paasam
பார்வை : 365

மேலே