வறுமையின் விளிம்பில் வாழ்வு

வெந்ததை சாப்பிட வெட்டவெளி
துயர்களை ஊதித்தள்ளும் ஊதுகுழல்
எரிகின்ற நெருப்போ எண்ணங்கள்
வறுமையின் விளிம்பில் வாழ்வு
வளைந்த முதுகுடன் முதுமை
தனிமைக்கு சாட்சியோ காட்சி !
கட்டியவனும் மண்ணில் மறைந்து
பெற்றெடுத்த மக்களும் கைவிட்டு
தனித்துள்ள தாயின் நிலையிது
படமும் கூறுகின்ற பாடமென்ன 30
உறுதியில்லை குற்றமும் சுற்றமும்
இறுதியில்லை இன்பமும் துன்பமும்
தடையில்லை தளர்ந்தாலும் வாழ்ந்திட
நெஞ்சுறுதி பஞ்சமின்றி இருந்திட்டால்
வஞ்சகம் நிறைந்திட்ட இவ்வுலகில்
தஞ்சம்தேடி அலைந்திட வேண்டாம் !
( மாறுபட்ட கோணத்தில் சிந்தித்தேன் ...
ஆனாலும் வருத்தமே படத்தைக் கண்டு )
பழனி குமார்