அன்பு

அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சு...
அனைத்திற்கும் எல்லை உண்டு...
காலத்திற்கு எல்லை உண்டு..
மாறிக்கொண்டே இருக்கு..
கடலிற்கு எல்லை உண்டு...
கரையே முடிவாய் அதற்கு...
வார்த்தைக்கு எல்லை உண்டு..
ஒலியோடு முடியும் கணக்கு...
வாழ்க்கைக்கு எல்லை உண்டு...
மனிதா !
மரணமே முடிவாய் உனக்கு!!
அன்பொன்றே எல்லையற்றது ...
பரந்த அந்த வானம் போல....
அளவில்லா அன்பு கொள்வோம் !!
அனைத்து உயிர்களிடத்தும்!!!!!!!

எழுதியவர் : அருணா சுப்ரமணியன் (9-Sep-16, 11:30 pm)
Tanglish : anbu
பார்வை : 156

மேலே