எல்லோராலும் பயன் பெறுகிறோம்

சந்திக்கும் ஒவ்வொருவரிடத்தும்
நல்லவரோ வல்லவரோ
நாம் நிச்சயம்
அடைவது நன்மையே,
நல்ல நன்மை
அல்லது கெட்ட நன்மை.
அதனால்
யார் மீதும் குற்றம்
சொல்லக்கூடாது?

நல்லவர்களிடம்
நாம் அடைவது ஆனந்தம்.
கெட்டவர்களிடம்
நாம் அடைவது அனுபவம்.

மோசமானவர்களிடம்
நாம் அடைவது படிப்பினை.
சிறந்தவர்களிடம்
நாம் அடைவது நல்நினைவுகளே!

அதனால்
யாரிடமும் பழகலாம்,
தெளிவடையும் வரை,
நம்மை நாமே அறியும்வரை.!
சமத்தாக மட்டுமல்ல,
சில நல்லது
செமத்தியாகக்கூடவே.!

எழுதியவர் : செல்வமணி (10-Sep-16, 12:11 am)
பார்வை : 126

மேலே