தற்கொலை
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆயுதப் பரிசோதனை விற்பன்னர். டாக்டர் டேவிட் கெல்லி என்பவரின் தீடீர் மரணம் தற்கொலையா அல்லது பிறரால் தூண்டப்பட்ட தற்கொலையா அல்லது அரசியல் கலந்த கொலையா என்பது அண்மையில் இங்கிலாந்தில் மட்டுல்ல உலகத்திலேயே பலரின் மனதில் தோன்றிய கேள்வியாகும். இதே போன்று சதாமின் மகன் உதெய் (Uday) அமெரிக்கப் படையினரால் கொல்லப் பட்டாரா அல்லது தான் அவர்களிடம் உயிருடன் கைதாகி சித்திரவதைக்கு உட்பட முன் தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகமும் எழும்பி யுள்ளது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் முடிவில், சர்வாதிகாரி ஹிட்லர் தான் உயிருடன் எதிரிகளிடம் பிடிபடக் கூடாது என்பதற்காக மனைவியுடன்(காதலியுடன்) தற்கொலை செய்து கொண்டான். தமிழ் ஈழத்தலைவர் இராணுவத்தால் சுட்டுக்கொள்ளப்பட்டாரா?, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தப்பி ஓடிவிட்டாரா? என்பது கேள்விக்குறி. தமிழ் நாட்டில் ஒரு பிரபல சினிமா தயாரிப்பாளரான வெங்கடேசன் கடன்காரர்கள் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார். இப்படி தற்கொலை என்ற செயல் ஏழை, பணக்காரன், சர்வாதிகாரி, கலைஞர், அரசியல்வாதி, பொது மனிதன் என்ற பேதமின்றி எல்லோரினதும் மனதில் தோன்றக் கூடிய எண்ணமாகும். மனதில் தோன்றும் பயம், வலி , பாதுகாப்பின்மை , காரணமாக சிலரால் எடுக்கப்படும் முடிவே தற்.கொலை. “நான் ஏன் வாழவேண்டும் எதைச் சாதிக்கப் போகிறேன், மற்றவர்களின் ஏளனத்துக்கு இலக்காகக் கூடாது” என்ற எண்ணம் அவர்கள் மனதில் தற்கொலைக்கு வித்திடுகிறது.. தாமே தமது உயிரை போக்கிக் கொள்பவர்கள் விரக்தியின் எல்லைக்குத் தள்ளப்படுபவர்கள். தற்கொலை புரியவேண்டும் என்ற தீர்மானத்துக்கு வருவது அவ்வளவு இலகுவானதில்லை. “என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்ற தீர்மானமே அவர்களை அந்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது. தற்கொலை புரிவதற்கு பல காரணங்கள் உண்டு அவற்றில் சில கீழே தரப்பட்டுள்ளன
• கடன் தொல்லையும் பொருளாதாரக் காரணங்களும்.
• சமூகத்தில் அவமானம் தாங்கமுடியாமல் தற்கொலை புரிதல். திருமணமாகாமல் கருத்தரித்தல்இ ஒழுக்கமின்மையால் உருவாகும் வருத்தம் போன்றவையுடன் இணைந்தது.
• எதிரிகளின் கைதுக்குப் பயந்து தம்முயிரை மாய்த்துக்கொள்ளல்.
• காதலில் தோல்வி. காதலன் அல்லது காதலி மேல் அளவு கடந்த காதலால் ஏற்படும் விரக்தி.
• பரீட்சையில் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலை. இது வீட்டில் பெற்றோரினதும், இனத்தவரினதும் வசையில் இருந்து தப்புவதற்காக எடுத்துக்கொள்ளப்படும் முடிவு. வீட்டின் பொருளாதார நிலையும் இதற்கு ஒரு காரணமாகலாம்.
• பகிடி வதையினால் (Ragging) ஏற்பட்ட மனத்தாக்கம். இது பொதுவாக பல்கலைக் கழகங்களில் நடைபெறும் தற்கொலைகளுக்கு காரணமாகும்.
• மனோ வியாதி அல்லது வருத்தம் காரணமாக தம்முயிரை மாய்த்துக்கொள்ளல்.
• பிறரின் பயமுறுத்தலினால் அல்லது தூண்டுதலால் தற்கொலை புரிதல்.
• காப்புறுதி பணம் பெறத் தற்கொலை செய்தல்
• மரபு வழி வந்த சமூக வழக்கத்தினால்இ உடன்கட்டை ஏறுதல்இ மத வழிபாட்டு முறை ஆகியவற்றினால்; தற்கொலை புரிதல்
• கற்புக்கு காமுகனால் பங்கம் வரவாதவாறு தம்முயிரை மாய்த்துக்கொள்ளல்.
• ஒருவர் மேல் அளவு கடந்த பாசம் வைத்து அவர் பிரிந்த பின்னர் அவருடன் தனது ஆத்மா மறுபிறவியில் ஒன்று சேரும் என்ற நம்பிக்கையில் தற்கொலை புரிதல்.
சினிமா உலகமும் தற்கொலையும்
நடிகர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் சினிமாவுடன் தொடர்புள்ளவர்கள் தற்கொலைசெய்து கொள்வதை நாம் ஊடகங்கள்வாயிலாக அறிந்துள்ளோம். ஹாலிவுட் முதற் கொண்டு: தமிழ் சினிமா உலகம் வரை தற்கொலை வியாதி இருந்து வருகிறது. பிரபல நடிகை மர்ளின் மொன்றோ தூக்க மாத்திரை உண்டு தற்கொலை புரிவதற்கு பல அரசியல் வாதிகளுடன் உள்ள தொடர்பே காரணம் எனச் சொல்லப்பட்டது. தமிழ் சினிமாவில் சில்க்கு சிமிதா, படா பட் ஜெயலஷ்மி, ஷோபா, விஜி, கல்பனா, பிரதூஷா, மோனல் போன்ற சினிமா நடிகைகள் தற்கொலை செய்துகொண்டார்கள். மிக பரபல தயாரிப்பாளர் ஜீ வெங்கடேசன், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த பிரபல பாடகர் டி.எம் சொளந்தரராஜன் கூட ஸ்ப்ரிட் அருந்தி தன் உயிரைப் போக்கிக் கொள்ள முயன்றுள்ளார். தனக்கு முன்பு இருந்த மதிப்பு, மரியாதை, புகழ் எல்லாம் மங்கி, தன்னை பாடுவதற்கு ஒருவரும் அழைப்பதில்லையே என்பது ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். இது அவரின் மனநிலையைப் பொறுத்தது.
21 வயதுடைய மோனல் பிரபல நடிகை சிம்ரானின் சகோதரி. திரையுலகுக்கு அறிமுக மாகி மூன்று படங்களில் நடித்தபின்னர் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு காதலே காரணம் என பலரால் பேசப்பட்டது. அவர் தானே தன் உயிரை மாய்த்துகொள்வதற்கு மன நிலை பெரிதும் பாதிக்கப்பட்டதே காரணமாகலாம். காதல் கைகூடாதது பெரிதளவுக்கு மனநிலையை பாதித்திருக்குமென நம்பக் கூடியதாயில்லை காரணம் பல. தற்கொலை அவரால் தீடீரென தீர்மானிக்ப்பட்டு செய்த செயலெனலாம்.
பல நடிகைகளின் பெற்றோர்கள் . இனத்தவர்கள், கூடப் பிறந்தவர்கள், அவர்களை சினிமாவுலகுக்கு அறிமுகம் செய்தவர்கள், நடிகைகள் உழைக்கும் வருமானத்தில் தங்கி வாழ்பவர்கள். அதுவுமன்றி அவர்களது வாழ்க்கை, திருமணம், தீர்மானங்கள் போன்றவற்றில் முக்கியமாக ஆதிக்கம் செலுத்துபவர்கள். இதுவே சில்க் சுமிதாவின் மரணத்துக்கு காரணம் என்று ஊடகங்கள விளக்கம் கொடுத்தன. நடிகைகள் திருமணமாகி சில காலம் கணவனுடன் வாழ்ந்தபின் விவாகரத்து செய்வது ஹாலிவுட் உலகுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுலகுக்கும் பொதுவானதொன்று. இதுவே அவர்கள் மனநிலை எவ்வளவுக்கு சிந்தித்து செயலாற்றும் திறமையை இழந்துவிடுகிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ரோஜா, மும்தாஜ், சிறீ ப்ரியா போன்ற நடிகைகள் கூட தம் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார்கள். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது.
தற்கொலை முறைகள்.
தற்கொலை செய்வதற்கு நாள, நேரம், இடம் குறித்து செயல்படுவது கிடையாது. மிக முக்கியமாக மற்றவர்கள் இல்லாத இடத்தையும் நேரத்iதுயும் தேர்ந்தெடுப்பார்கள். உதாரணத்திற்கு குடிகாரக் கணவன் மேல் உள்ள வெறுப்பு காரணமாக மூன்று பிள்ளைகட்கு தாயான ஒரு பெண் பகல் இரண்டு மணியளவில் ஜனப்போக்குவரத்து குறைந்த நேரம் பார்த்து கடற்கரை ஓரம் உள்ள இரயில் பாதை அருகே கடல் காற்றை சுவாசிப்பதுபோல நின்று ரயில் வரும் சமயம் அதன் முன் குதித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இத்தகைய முறையில் தற்கொலை செய்வதற்கு மனத்தைரியம் வேண்டும். வீட்டில் அதை செய்யக் கூடிய சூழ்நிலை இல்லாதபடியால் ரயில் முன் தற்கொலை புரிவதை தேர்ந்தெடுத்திருக்கிறாள் அப்பெண். அந்த முறையைப் பாவித்து தற்கொலை செய்ய முனைவதினால் சாவு நிட்சயம் என்பதில்ல. சில சமயம் ரயிலினால் தூக்கி எறியப்பட்டு உயிர் பிழைத்து, முடமாகும் துற்பாக்கிய நிலையையும் அடையலாம். தற்கொலை செய்வதற்கு பல முறைகளை நாடுகிறார்கள் :
• அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரை எடுத்தல்.
• பொட்டாசியம் சயனைட்இ பொலிடோல் போன்ற நஞ்சு அருந்துவது.
• கட்டிடத்தின் உச்சியில் இருந்து குதித்து உயிரை மாய்ப்பது. இது உத்திரவாதமான முறையல்ல. சில சமயம் உயிர் தப்பி முடமாகலாம்
• ரயில் முன் குதித்து மரணத்தை தழுவுவது.
• கழுத்தில் கயிற்றினால அல்லது சேலையினால்; சுருக்கு போட்டு இறப்பது.
• உடலில் பெற்றோல் அல்லது மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு பற்றவைத்து எரிவது. இது தமிழ்நாட்டில் அரசியல் கட்சிக்காக தமது உயிரை போக்கி மக்களி;ன் அனுதாபத்தை பெறும் வழிகளில் ஒன்று.
• கிணறு, ஆறு, குளம், ஓடும் ரயிலுக்கு முன்னாள் குதித்து அல்லது கடலில் குதித்து உயிரை மாயத்தல்.
• துப்பாக்கியைப் பாவித்து சுட்டு தற்கொலை புரிதல்
• கைளில் உள்ள நரம்புகளை வெட்டி குருதி பெருக்கத்தால் உயிரை போக்குதல்.
தற்கொலை செய்யமுன்னர் அனேகர் தாம் தற்கொலை செய்யும் காரணத்தை விளக்கி ஒரு கடிதம் எழுதி வைத்து இறப்பார்கள். மற்றவர்களுக்குத் தனது மரணத்தால் பிரச்சனைகள் வராமல் இருப்பதற்காகவே இந்த வழியைக் கையாளுவார்கள்.
ஸ்ரீ லங்காவில் தற்கொலை விகிதம்.
உலக நாடுகளில் மேற்கத்திய நாடுகளில் தற்கொலை விகிதம் குறைந்தும் ருஷ்யா, அதைச் சுற்றியுள்ள நாடுகளில் இளைஞர்களிடையே கூடியும் வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அயர்லாந்து, நியூசீலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இவ்விகிதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடந்த இரு தசாப்தங்களாக ஆண்களிடையே; 10 விகிதமும்,. பெண்களிடையே 40 விகிதமும் தற்கொலைகள் குறைந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம்இ சமூகத்தில் பொருளாதார பின்னடைவு போன்றவை மக்கள் மனதில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்பது பலரின் கருத்தாகும். மேற்கத்திய நாடுகளில் தற்கொலை விகிதம் குறைந்ததிற்கு மனநோயாளிகளுக்கு வேண்டிய மருத்துவ வசதிகளும் நிவராரணங்களும் கிடைக்கக் கூடியதாக இருப்பதே முக்கிய காரணமாகும்.
உலகத்தில் தற்கொலைகள் விகிதம் கூடிய நாடுகளில் முன்னனணியில் நிற்பது லித்துவேனியா. இந்நாட்டில் 1998ம் ஆண்டு 100இ000 ஆண்களில் 74 ஆண்களும் 100இ000 பெண்களில் 14 பெண்களும் தற்கொலை செய்தார்கள் எனக் கணிக்கப்பட்டது.
1995ல் உலகிலேயே தற்கொலைகள் விகிதம் கூடிய நாடுகளில் ஸ்ரீ லங்காவும் ஒன்று இந்நாட்டில் 1950ம் ஆண்டில் ஓரு இலட்சம் பேரில் 6 பேர் தற்கொலை புரிந்தார்கள் இந்த எண்ணிக்கை 1964ல் இரு மடங்காகிஇ 1969ல் 19 ஆக உயர்ந்து 1995ல் 47.6 ஆகியது. இதற்கு முக்கிய காரணம் உள்நாட்டு யுத்தமும்இ; பொதுமக்களிடையே துவக்குகள், பூச்சி கொல்லி மருந்துகள் போதியளவு புழக்கத்தில் இருப்பதுமேயாகும். அத்தோடு யுத்தம் காரணமாக வாழக்கைச் செலவு அதிகரித்ததினால் பல குடும்பங்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு தற்கொலை செய்வதையே முடிவாக கருதினார்கள். வேலையில்லாத் திண்டாட்டமும் ஒரு காரணமாகும். யுத்த சூழ்நிலையில் கற்பை இழந்த பெண்கள்இ இருப்பிடங்களை விட்டு வேறு சூழலில் வாழ முற்பட்டபோது;இ படையினராலும் பொதுமக்களாலும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி கவலையினால் தற்கொலை செய்தோரும இதிலடங்குவர். 2000ம் ஆண்டு இந்த விகிதம் வெகுவாகக் குறைந்து 28.5 ஆயிற்று. தற்கொலை புரிந்தவர்களில் 75 விகிதம் இளைஞர்களும் குழைந்தைகளுமாவர்.
வடக்கு கிழக்குப் பகுதிகளில் தற்கொலைகள் அதிகரிப்பு
வடக்கு கிழக்குப் பகுதிகளிலிலும் தற்கொலைகள் குடும்பப் பிரிவினால் அதிகரித்துள்ளது. இது அகதிகள் வாழும் இடங்களில் கூடுதலாக நடைபெறுகிறது. 2001 – 2002ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணப் பகுதியில் 12 பேரும், சண்டிலிப்பாயில் 10 பேரும் சுன்னாகம், உடுவில் பகுதியில் 13 பேரும் தற்கொiலை செய்து கொண்டதாக பதிவுகள் கூறுகின்றன. இதில் பெரும் பான்மையானோர் 20வயதுக்கு குறைந்தவர்கள். அகதிகள் வாழும் சூழ்நிலை, ஏழ்மை , சீதனம் , மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுரை கூறி நல் வழியில் நடத்த போதிய வசதிகள் இல்லாமை போன்றவை இத்தற்கொலைகள் அதிகரிக்க காரணங்களாகும். மக்களின் மனநிலையை யுத்தம் வெகுவாகப் பாதித்துள்ளது. வசதியாக வாழ்ந்த குடும்பங்கள் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டன. சுகாதார வசதிகள் குறைவாலும் மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் இல்லாமையும் தற்கொலைகள் இப்பகுதிகளில் அதிகரிக்க காரணங்களாய் உள்ளது. அண்மையில் காங்கேசன்துறையில் இருந்து புலம்பெயர்ந்து மருதனாமடத்தில வாழும் ஒரு யுவதிஇ விறகு சேகரித்து வாழ்க்கை நடத்தினாள். குடும்பத்திற்கு தனது மீன்பிடி தொழில் மூலம் வருமானம் கொண்டு வந்த தந்தை தொழிலை இழந்தார். கண்ணி வெடியில் சிக்கி ஒரு காலை இழந்தார். வறுமையில் குடும்பம் வாழ்க்கை நடத்தியது. பத்தொன்பது வயதில் அவள் அழகில் மயங்கி, அகதிகள் முகாமில் வாழ்ந்த இளைஞன் ஒருவன் அவளைக்; காதலித்து திருமணம் செய்தான். திருமணத்தின் போது அவளுக்குச் சீதனம் கொடுக்கக் கூடிய நிலையில் அவளின் பெற்றோர்கள் இருக்கவில்லை. திருமணமாகி சில காலத்திற்கு பின்னர் சீதனம் வாங்கி வா என அவளைக் கணவன் துன்புறுத்தி, பெற்றோரிடம் திருப்பி அனுப்பினான். மனமுடைந்த அவள் தற்கொலை செய்து கொண்டாள். இது போன்ற கதைகள் அகதிகளிடையே ஏராளம்.
ஸ்ரீலங்காவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்தியாவில் தற்கொலை விகிதம் மிகக் குறைவு. 1995ம் ஆண்டு 100,000 ஆண்களில் 11 ஆண்களும், 100,000 பெண்களில் 8 பெண்களுமே தற்கொலை செய்தார்கள்
மற்றைய ஜீவராசிகளும் தற்கொலையும்.
மனிதன் மட்டும் தற்கொலை புரிவதில்லை. இயற்கையில் பறவைகளும் மிருகங்களும், புழு பூச்சிகளும் தற்கொலை செய்து கொள்கின்றன. நிலப்புழுவானது மழை பெய்ததும் நிலத்துக்கடியில் இருந்து வெளியே வந்து ஊர்ந்து பாதையை அடைகிறது. பின்னர் வெய்யிலாலும் போக்குவரத்து வாகனங்களாலும் அவற்றின் உயிர்கள் நசிக்கப்படுகி;ன்றன. பாம்புகள் தனது துணையை இழந்தவுடன தற்கொலைசெய்து கொள்வதாக கதைகளில் வாசித்தறிந்துள்ளோம். ஒக்டொபஸ் எனப்படும் எண்காலி ஜந்து தற்கொiலையில் ஈடுபடுகிறதா என்பதை விலங்கியலாளர் ஆராச்சி செய்துள்ளார்கள். முட்டையிட்டவுடன் தாயானது சாப்பிடாது தன்னுயிரை மாய்த்துக்கொள்கின்றது. திமிங்கலங்கள் கூட சில சமயம் தற்கொலை காரணமாக கடலோரங்களில் ஒதுங்குவதை அறிந்துள்ளோம். ஸ்விற்சர்லாந்தில் வாழும் லெமிங்ஸ் என்னும் எலிபோன்ற மிருகம் தங்கள் தொகை அளவுக்கதிகம் பெருகும்போது வெள்ளத்துள் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கிறது.
சரித்திரத்தில் தற்கொலைகள்
சரித்திர வரலாற்றில் தற்காலை என்று வரும்போது நமது நினைவில் நிற்பது ஹிட்லரும் , ஜப்பானின் இரண்டாம் உலக யுத்த கால பிரதமர் டோஜோவும், கி.பி முதலாம் நூற்றாண்டில் ஆண்ட கிரேக்க மன்னன் நீரோவும், கி.மு 69ம் ஆண்டு முதல் 30ம் ஆண்டு வரை எகிப்து நாட்டின் இராணியாக இருந்து பேரழகி எனப் பெயர் எடுத்த கிளியோபத்திராவும், முஸ்லீம் மன்னன் அலாவுதீனிடமிருந்து தங்கள் கற்பை காப்பாற்றிக் கொள்ள தனது தோழிகளுடன் அரண்மணையில் தீயை மூட்டி தற்கொலை புரிந்து கொண்ட ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த சித்தூர் ராணி பத்மினி தான் எமது நினைவுக்கு வருகிறது. இது போன்று பல மன்னர்கள் போரில் தோல்வியடைந்து தற்கொலை செய்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. எழுத்தாளர்கள்இ அரசியல்வாதிகளஇ; வர்த்தகர்கள்இ சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருந்து தமது ஒழுக்கமின்மை காரணமாக அவமானப்பட்டவர்கள் தற்கொலையை நாடினார்கள். இதில் நீரோ மன்னனும் ஒருவன்.
தற்கொலையும் மதங்களும்.
மனித உடலில் உள்ள ஜீவன் கடவுளுக்கு ஒத்தது என்பதே பல மதங்களின் தத்துவம் பிறக்கும் போது அந்த ஜீவனானது தனது பிறவியை தேர்நதெடுக்கிறது. பிறப்பானது ஒரு அனுபவர். தான் பிறக்கும் நேரம், பிறக்கும் குடும்பம், இறக்கும் நேரம் அந்த ஜீவனால் குறிக்கப்படுகிறது. அக்கால இடைவெளியில், தான் முற்பிறவியில் செய்த கர்மாக்களை நிவர்த்தி செய்து மேலும் நல்ல, தீய கர்மாக்களை தனது அனுபவத்தின் முலம் சேகரித்து அதன்படி மறுபிறவி எடுக்கிறது என்கிறது இந்து மதம். மறுபிறவியானது எப்போது இடம்பெறும் என்பதற்கு நேர இடைவெளி கிடையாது. எங்கும் அப்பிறவி இடம்பெறலாம். ஆனால் தான் குறித்த பிறந்து இறக்கும் கால இடைவெளியில் தீடிரென தனது உயிரை தானாகவே போக்கிக் கொண்டால் முடிவடையாத அனுபவத்தை தேடி ஆத்மா அலைகிறது. இதற்காகவே தற்கொலை செய்த இந்துக்களுக்கு ஈமக் கிரிகைகள் செய்வதில் பல மாற்றங்கள் உண்டு. ஆத்மா சாந்தியடையாது அலைகிறது என்கிறார்கள். இங்கு சாந்தி என்பது வாழக்கை அனுபவத்தின் திருப்தியை குறிக்கும். முற்பிறவியில’; செய்த கர்மா படி நோய்வாய்பட்டு அழுந்திச் சாகும் அனுபவத்தை ஒரு ஜீவன் தேர்ந்தெடுத்தபின்னர் நோய்க்குப் பயந்து தற்கொலை புரிந்து கொணடால் ஆத்மா தன் கர்மாக்களை முற்றாக அனுபவிக்கவில்லை என்பதாகும். தற்கொலை செய்த ஜீவனானது குறுகிய காலத்தில் மறு பிறவி எடுத்து தனது மிகுதி இருந்த அனுபவ காலத்தை முடித்துக்கொள்கிறது. இதையே குறைந்த வயதில் மரணத்தை தழுபுவர்களுக்கு காரணமாகக் காட்டப்படுகிறது. எல்லா மதங்களும் தற்n;காலையை எதிர்க்கிறது. பௌத்தம் மற்றவர்களி;ன் உயிரை எடுப்பது பாவம் என்கிறது. ஆகவே தன்னுயிரை தாமே போக்கிக் கொள்வதையும் ஏற்றுக்கொள்வதில்லை.
இந்தியாவில் சிலர் மதத்தி;ன பெயரால் கடைப்பிடிக்கப்படும் மூட நம்பிககைகள் தற்கொலைக்கு துணைபோகிறது. 1802ம் ஆண்டளவில் பிரித்தானியர் ஆட்சியின் போது வங்காள தேசத்தி;ன கங்கை நதி கடலுடன் சங்கமிக்கும் இடத்தில் உள்ள சாகர் என்ற தீவில் மதவழிபாடு காரணமாக குழந்தைகளை கடலில் உள்ள சுறா மீன்களுக்கு பலிகொடுத்தனர். இது போன்று நர்மதா மலையில் இருந்து கீழே குதித்து மதவழிபாடு காரணமாக தற்கொலைகள் நடந்தது உண்டு. சைவர்கள்இ பவானி தெய்வத்திற்கு முன்னே கழுத்தை வெட்டி தற்கொலை செய்யும் முறையை கடைப்பிடித்து வந்தனர். மனைவியானவள் கணவன் இறந்த பின்னர் உடன் கடடை ஏறுதலும் ஒரு வித தற்கொலையாகும். இது இந்தியாவில் மரபு வழி வந்த சமூக முறைகளில் ஒன்றாகும்.
தற்கொலைப் போராளிகள்
தற்கொலை மூலம் எதிரிகளை தாக்கும் முறை பலகாலமாக இருந்து வரும் ஒரு முறையாகும். ஜப்பானியரின் “ஹர-கிரி” செய்யும் படையினர் தமது நாட்டை காப்பாற்ற கப்பலின் புகை வெளி வரும் குழாயுக்குள் குதித்து கப்பலையும் தம்மையம் சிதறடித்த முறையை இரண்டாம் உலக யுத்தத்தில் அறிந்துள்ளோம். சோழர் ஆடசியின் போது கூட தற்கொலைப் படையினர் இருந்ததாக வரலாறு கூறுகிறது. தற்காலத்தில் விடுதலை புலிகள். பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் இயக்கங்கள். அல்குவைதா இயக்கத்தினர். இம்முறையைக் கையாளுகின்றனர். இதில் தம்மையும் அழித்து தம் எதிரிகளையும் அழிப்பதே நோக்கமாகும். தற்கொலைப் போராளிகளை இஸ்லாமிய மதம் ஏற்றுக்கொள்கிறதா?. இதைப்பற்றி வௌவேறான கருத்துக்களை இஸ்லாமிய தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள். தம்மை எதிரி தாக்கினால் இந்த முறையை ஆயுத பலம் குறைந்த காரணத்தால் பாவிக்கலாம் என்கிறார்கள் ஒரு சாரார். ஆனால் பெண்கள்இ குழந்தைகளஇ; வயோதிபர்கள் பாதிக்கப்படக் கூடாது என்கிறார்கள். தற்கொலை முறை ஆயுத பலம் குறைநத படையினரால் ஒரு ஆயுதமாக பாவிக்கப்படுகிறது. இதோடு மதமும் கலக்கப்படுகிறது.
முடிவுரை
தற்கொலை செய்வதற்கு ஒரு துணிவு வேண்டும். அந்த துணிவு மனிதன் விரக்தியின் எல்லைக்கு போகும் போது உருவாகிறது. சுயமாக சிந்திக்க முடியாத மனநிலையும் அதற்கு காரணம். தான் சமூகத்தில் மற்றவர்களால் ஏமாற்றப்பட்டுவிட்டேன் என்ற கருத்து அவர்களை மேலும் வாழ்வதில் பயனில்லை என்ற தீர்மானத்துக்கு வரச்செய்கிறது. மனநிலை பாதிப்படைந்தவர்கள் இந்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆகவே அவர்களை அடையாளம் கண்டு, தக்க ஆலோசனைகளும் அறிவுரைகளும் நல்கி அவர்கள் எண்ணங்களை மாற்றுவது அவசியம்.
*******