நேசி

உலகப் பொதுமறை
************************

*திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.

*திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812

*திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்

*திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133

*திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380

*திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

*திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

*திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330

*திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

*ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது.

*திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000

*திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

*திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை

*திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை

*திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்

*திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி

*திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள

*திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

*திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்

*திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து-னி

*திருக்குறளில் ஒரு சொல் அதிக அளவில், அதே குறளில் வருவது "பற்று" - ஆறு முறை.

*திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங

*திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் ( அகர முதல என தொடங்கும் முதல் குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது, இதில் ஆதி பகவன் - என்பது கடவுளை குறிக்கிறது)

*திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்

*திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்

*திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்

*திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்

*திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.

*திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.

*ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

*திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.

*திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்

*திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

~ தமிழ் விக்கிப்பீடியா

ஆய்வு
*********

* ஏன் திருக்குறளில் தமிழ் என்ற சொல்
பயன்படுத்தவில்லை என்றால்...

வள்ளுவனுக்கு நம்மை பற்றி நன்கு தெரிந்திருக்கிறது...

நாம் : பார்த்தாயா...
தமிழ் என்று வந்திருக்கிறது.
இது தமிழனுக்குத் தான் சொந்தம் என்று...
வெட்டி பந்தா காண்பித்திருப்பாய்...
அவர் சொன்ன நல்லதெல்லாம்
நினைவுக்கு வராது..
அரசியல் செய்ய நன்கு வரும்...
இன்றைய இளைஞர்களும்
அரசியல்வாதிகளும்
ஏற்கனவே இப்படித் தான்
வெறும் வாய் வார்த்தையாய்
பொய் ஒழுக்கத்தை உலகிற்கு வெளிப்படுத்துகிறீர்கள்.

பிறர் :
ஒருவன் எவ்வளவு நல்ல கருத்துக்களை சொன்னாலும் அதை எல்லாம் பார்க்காமல்
முதலில் அவன் யார் என்று பார்ப்போம்...

தமிழனின் பேச்சை பிற மொழிக்காரன் உதாசினம் செய்வான்.
பிற மொழிக்காரனின் பேச்சை நாம் உதாசினம் செய்வோம்...
நல்லவையாகவே இருந்தாலும்
பேதம் பார்த்து...

இது எல்லாம் களைய வேண்டும்
என்று தான் வள்ளுவர் அன்றே...
மொழி இனம் மதம் எல்லை எல்லாம்
கடந்து எல்லா உயிர்களுக்கும்
பொதுவாக இருக்க வேண்டும் என்று
ஒப்பற்ற உலகப்பொதுமறையை உயிர்கள் அனைத்தும் இப்படித் தான் வாழ வேண்டும் என்ற உயரிய சிந்தனையினால் எல்லா உயிர்களுக்கும் படைத்துள்ளார்.

திருக்குறளும் ஏழும்
*************************

(நம்மை பற்றி திருவள்ளுவருக்கு நன்கு தெரியும்...

நாம் என்ன என்ன செய்வோம்...
எப்படி எப்படி நடிப்போம் என்று...

(கற்பனைக்கு:
திருக்குறளில் நாம் முன்னோர்களின் பெயர்களை சேர்த்து விட்டு
திருக்குறளை எழுதியது என் பாட்டன் தான் என்று சொல்வோம்...)

நாம் படிக்கும் வரலாறு எதுவுமே
முழுமையாக உண்மை வரலாறு கிடையாது.

திரித்து எழுதிய இல்லை
திருத்தி எழுதிய வரலாறே...

இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில்
வடிவேலு சொல்வாரே...

300 (3000) வருடங்களுக்கு பிறகு வரும் மடையர்களுக்கு தெரியவா போகிறது

அது தான் உண்மை.
இப்படி தான் எல்லா வரலாறும்
மாறிக் கொண்டே வருகிறது.

வரலாறு மட்டுமா
பழமொழிகள் கூடத்தான்...

கல்ல கண்டா நாய காணோம்
நாய கண்டா கல்ல காணோம்

சுத்தமா அதோட அர்த்தத்த இல்லாம
செஞ்சிட்டோம்

சரியாக
அந்த பழமொழி

கல்லை கண்டால்
நாயகனை காணோம்
நாயகனை கண்டால்
கல்லை காணோம்

இதற்கு என்ன பொருள்
என்றால்

கோவிலில் உள்ள கடவுள் சிலையை
கல்லாக பார்த்தால்
கடவுள் (நாயகன்) தெரிவதில்லை.
கடவுளாக பார்த்தால்
கல் தெரிவதில்லை...

இதுவே தசாவதாரம்
படத்தில்

கல்லை மட்டும் கண்டால்
கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால்
கல்லடி தெரியாது
என்று வரும்.

சரி நான் மீண்டும் திருக்குறளுக்கு வருகிறேன்...
இதை எல்லாம் நினைவில் வைத்து தான்
எங்கே ஒரு பத்து குறளை சேர்த்து அவர்களுடையதாக ஒரு வரலாற்றை உருவாக்கிடுவார்களோ

ஒரு பத்து குறளை சேர்த்து வரலாற்றை மாற்ற முடியாது

ஏனெனில் திருக்குறளின்
அதிகாரம் = 133 (கூட்டினால் ஏழு)

நாம் ஒன்றை சேர்த்தால் ஏழு வராது...

திருக்குறளின் ஒரு வார்த்தையை சேர்த்து விடலாம் என்றால் .அதுவும் முடியாது .எல்லா குறளுக்கும் நீ மாற்ற வேண்டும் = திருக்குறளில் ஏழு சீர்கள்

திருக்குறளின் மொத்த குறள்களின் எண்ணிக்கை = 1330 (கூட்டினால் ஏழு)

திருக்குறளின்

பொருட்பாலில் 70 அதிகாரங்கள்.(கூட்டினால் 7)

இன்பத்துப்பாலில் 25 அதிகாரங்கள்
(கூட்டினால் 7)

அறத்துப்பாலில் 38 கூட்டினால் ஏழு வராதே? என்கிறீர்கள்.

ஆம் வராது தான்

அறத்துப்பாலில் 4 இயல்கள் உள்ளன

1) பாயிரவியல் =4 அதிகாரங்கள்
2) இல்லறவியல் = 20 அதிகாரங்கள்
3)துறவறவியல் = 13 அதிகாரங்கள்
4) ஊழியல் = 1 அதிகாரம்

---------------------------------------------------------------------

மொத்தம் = 38 அதிகாரங்கள்

அதில் பாயிரவியல் நான்கும்
முன்னுரை.
அதை கணக்கில் எடுத்துக் கொள்ள கூடாது

எனவே 38 -4 =34(கூட்டினால் 7)

திருக்குறளில் 7 என்ற சொல் 8 முறை வருகிறது.

கோடி என்ற சொல் ஏழு முறை வந்து
எழுபது கோடி என்ற சொல் ஒருமுறை வந்துள்ளது...

சுருங்க சொல்லி விளங்க வைப்பதில்
சூத்திரதாரி
எப்படி காப்பாற்றி இருக்கிறார்
பாருங்கள் வரலாற்றை...

அணுவை உலகாக்கியவர்
உலகை அணுவாக்கியவர்
திருவள்ளுவர்

உலகில் உள்ள எல்லா மனிதனுக்கும்
பொதுவானது பொதுமறை...

உயிர்கள் அனைத்தும்
எல்லைகள் கடந்து
மனிதத்தோடு அன்பாக பழகுங்கள்
எல்லா
உயிர்களிடத்திலும்...

என் மொழி
உன் மொழி
நம் மொழி
என்பதை விட
உலக மொழி

உலகில் உள்ள
எல்லா மனிதனும்
தமிழனே.....

தாய் மொழியில் பேசுங்கள்...

தமிழ் தமிழ் என்று அரசியல் செய்யாதீர்...

அன்போடு வாழுங்கள்...

நீ நான் என்ற பேதம் வேண்டாம்
யாவையும் பொதுவில் வையுங்கள்...

உலகத்தில் மனிதன் தோன்றிய பின் தான் யாவும் தோன்றியது
(மொழி இனம் மதம் )

மனிதம் தான்
உயிர்களுக்கு அவசியம்...

தடுக்கி விழுந்தவன்
எவனாக இருந்தாலும்
அம்மா என்று தான் கதறுவான்
(அவன் அவன் மொழியில்.)
(வார்த்தை தான் வேறு
வலி ஒன்று தான்
பாசம் ஒன்று தான்)

அதை பார்த்து
ஐயோ என்று
பதறியடித்து ஓடுகிறானே
அவனிடத்தில் மனிதம் வாழ்கிறது
(மதம் இனம் மொழி யாவும்
நாம் கண்டுபிடித்தது

குணம் நமக்குள் இருப்பது...
மனிதம்(இரக்கம்) ஒவ்வொரு உயிருக்குள்ளும் இருக்கிறது )

மனம் பார்க்கும்
மனிதனுக்கு நிறம் தெரியாது
நிறம் பார்க்கும்
மனிதனுக்கு மனம் கிடையாது

அன்பால் தான் உலகம் இயங்குகிறது...
அன்பால் தான் நீயும் இயங்குகிறாய்
நானும் இயங்குகிறேன்

உயிர்களை மதி.....
உயிர்களை நேசி.....

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (10-Sep-16, 4:02 pm)
Tanglish : nesi
பார்வை : 559

மேலே