பிரிவினை

கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் பிரிக்கப்பட்டபோது, இரண்டுக்கும் இடையில் ஒரு பெரிய சுவர் (பெர்லின் சுவர்) எழுப்பப்பட்டது.

ஒருநாள் கிழக்கு பெர்லினில் இருந்தவர்கள் நிறைய குப்பைகளை கொண்டு வந்து மேற்கு ஜெர்மனி எல்லைக்குள் கொட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

ஆனால் மேற்கு ஜெர்மனிகாரர்கள் பதிலுக்கு என்ன செய்தார்கள் தெரியுமா?

ஒரு லாரி நிறைய ரொட்டிகள் பழங்கள் , மளிகை பொருட்களை எடுத்து வந்து அழகாக எல்லையில் அடுக்கி வைத்துவிட்டு சென்றனர்.

அதன் மேல், "தன்னிடம் உள்ளதையே ஒருவன் கொடுப்பான்" என்ற வாசகம் அடங்கிய அட்டையை வைத்துவிட்டும் சென்றுவிட்டனர்...

உண்மைதானே ...
உங்களிடம் உள்ளதைத்தானே பிறருக்கு தருவீர்கள்..

எழுதியவர் : செல்வமணி (10-Sep-16, 10:38 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : pirivinai
பார்வை : 174

மேலே