சினிமா காதல்

நயன்தாராக்களையும்
மடோனா செபாஸ்டின்களையும்
ஒரே ஒரு புன்னகையில்
அலேக்காக
தூக்கிப் போட்டுவிடுகிறாய்..

நீ
எல்லா விஜய் படங்களை போல்
தினமும்
ஒரே மாதிரிதான் இருக்கிறாய்..
விஜய் ரசிகனை போல்
அது எனக்கு மட்டும்
வித்தியாசம் வித்தியாசமாக
தெரிகிறது ..

நீ
கவுதம் வாசுதேவ் மேனனின்
படங்களை போல
மிகவும் மெதுவாக நடக்கிறாய்..
நான்
அஜித்குமாரை போல்
சளைக்காமல்
உன் பின்னே நடக்கிறேன்..

மணிரத்தனம் நீ
அட்லீ நான்..

இளையராஜா நீ
யுவன் சங்கர் ராஜா நான்..

டாஸ்மார்க் நீ
தமிழ்நாடு நான்..

கார்முகி நீயில்லாமல்
வாழ்வேது எனக்கு..

- கோபி சேகுவேரா

எழுதியவர் : கோபி சேகுவேரா (11-Sep-16, 9:04 pm)
Tanglish : sinimaa kaadhal
பார்வை : 83

மேலே