காதல் ரோஜா

தமிழ் ரோஜா

பனிமழையில் உறைந்து
தூவானமாய் பொழிந்து
கலைவண்ணன் மடியில் பிடித்து
சிறகுகளில் சுடிதார் கட்டி
மயிலிறகில் தேய்த்த நெற்றி
மண்ணை பிளந்து
புத்துணர்ச்சியில் பொங்கி
முன்னே பதுங்குகிறாள்...
என் முன்னே!
கண் முன்னே!
இந்த தமிழ் ரோஜா!

தேனை உண்ணும் வண்டுகளாக
இதழை குடிக்கும் தேனாக
வேடந்தாங்கலில் உலவும் மயிலாக
மொட்டுகளை திறக்கும்
காற்றாக
ரத்தம் ஓட்டம் பாயும் தங்கதேகமாக
மழையை கண்டு நடுங்கும்
கதிரவனாக பதுங்குகின்றாள்...
என் முன்னே!
கண் முன்னே!
இந்த சொப்பன தேவதை!

எழுதியவர் : ப.தவச்செல்வன் (11-Sep-16, 10:11 pm)
Tanglish : kaadhal roja
பார்வை : 245

மேலே