உன்னை பிரிந்து விட்டதற்கான சாட்சிகள்

புது பேனா வாங்கியும்
எழுதாத உன் பெயர்

மௌனமாய் இருந்தும்
எழுதாத கவிதை

அறையில் இருந்தும்
இரசிக்காத
உன் புகைப்படம்

யாரோ அழைத்த
உன் பெயர்
திரும்பாத நான்

உனக்கு பிடித்த பாடல் அலைவரிசையில்
முணு முணுக்காத என் உதடு

உனக்கு பிடித்த வண்ணப்புடவை
கட்டியிருந்த சேலைக் கடை பொம்மை
இரசிக்காமல் நகர்ந்த நான் ...

இவையேல்லாம் நான்
உன்னை பிரிந்து விட்டதற்கான
சாட்சிகள் ...

எழுதியவர் : கிரிஜா.தி (11-Sep-16, 9:27 pm)
பார்வை : 280

மேலே