நெஞ்சில் காதல் காதல் ---முஹம்மத் ஸர்பான்

பூக்கள் பூக்கும் வேளை
கதிர்கள் மங்கும் மாலை
ஏக்கம் கொண்ட காளை
நெஞ்சில் காதல் காதல்

புல்லின் மேலே ஈரம்
சிறு நந் தவன ஓரம்
பார்வை தந்த காரம்
நெஞ்சில் காதல் காதல்

மேகம் சிந்தும் துளிகள்
சிற்பம் செதுக்கும் உளிகள்
மொழிகள் பேசும் விழிகள்
நெஞ்சில் காதல் காதல்

இருளில் காணும் நிலவு
மனதில் தூங்கும் கனவு
இதமாய் சிரிக்கும் நினைவு
நெஞ்சில் காதல் காதல்

ஆயன் மீட்டிடும் இசை
குருவிகள் காட்டிடும் திசை
தளம்பை மறைக்கும் தசை
நெஞ்சில் காதல் காதல்

பசுமை தாங்கும் மண்
மேகம் சுமக்கும் விண்
பெண்ணை பார்க்கும் கண்
நெஞ்சில் காதல் காதல்

இலைகள் அசையும் காற்று
தாமரை தவழ்ந்திடும் ஊற்று
சேற்றில் முளைக்கும் நாற்று
நெஞ்சில் காதல் காதல்

நிலவோடு இணையும் தாரகை
ஓவியன் மூச்சின் தூரிகை
கவிஞன் பேசிடும் செந்தமிழ்
நெஞ்சில் காதல் காதல்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (12-Sep-16, 7:49 am)
பார்வை : 106

மேலே