​கொஞ்சி பேசும் விழிகள்

வஞ்சியவளின் கொஞ்சிடும் விழிகள்
வியப்பில் ஆழ்த்திடும் விண்மீன்கள் !
​விஞ்சிடும் விந்தையவள் விழியழகி
விரும்பிப் படித்திடும் விழியதிகாரம் !

தஞ்சமடைய செய்திடும் விழிகள்
நெஞ்சமதை மஞ்சமாக மாற்றிடும் !
வஞ்சகம் துளியேனும் தென்படாத
பஞ்சிதம் பாவையவளின் விழிகள் !

விரிந்திட்ட இமைகள் அழைக்கிறது
துடித்திடும் இதயமும் துள்ளுகிறது !
ஈர்த்திடும் விழிகளால் தவிக்கிறது
உணர்ந்திடும் உள்ளம் தள்ளாடுது !

கட்டியம் கூறுவேன் கயல்விழியே
நாட்டியம் ஆடிடும் நெஞ்சங்களும்
கண்டால் நிச்சயம் நித்திரையிலும்
காண்பவர் நிலையும் தடுமாறும் !

( பஞ்சிதம் = நட்சத்திரம் )

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (12-Sep-16, 7:03 am)
பார்வை : 415

மேலே