காதல் - அபயம் அல்ல அபாயம்

தனித்து பயணம்
செய்யாதீர்கள்,
பாதை
ஊர் சென்று சேருமென்று
நம்பி செல்லாதீர்கள்,
திசைகள்
தெரிந்து கொள்ள முடியாதபடி
திக்கி நிற்காதீர்கள்.
உங்கள் பயணம்
அடுத்த ஆரோக்கியமான வழி செல்ல வேண்டும்,
அவஸ்தையான பயணம்
அவசியமுமல்ல,
அவசரமான பயணமும்
அவசியமுமல்ல,
அர்த்தமுள்ள பயணம்
செய்ய வேண்டிய
ஆர்வலராயிருங்கள்,
இங்கே வேகத்தடைகளை விட
வளர்ச்சித்தடைகளே அதிகம்,
வசீகரம் வசப்படுத்தி
வலையில் சிக்க வைத்து விடும்,
வனப்பை காத்து
வழியைப்பார்த்து
பயணம் செய்யுங்கள்,
உங்கள் வாழ்க்கை
உங்கள் இலக்கு
உங்களுக்கு முக்கியம்,
உங்களுக்கு மட்டும்தான்..!