மழை நிழல்
வெகு தூரம்
ஓடிக் களைத்திருக்கிறது
அவனது வாழ்வு.
அவனது பாதையின்...
விலங்குகள் நிரம்பிய சாலையில்
அதிகமாய் முளைத்திருக்கிறது
ஆதரவு இல்லங்கள்.
செயற்கையாய்
வெளிச்சம் வீசும்
அவனது நகரத்தில்
பச்சோந்திகள் நிறைந்துவிட்டன.
அலைவதற்கான
அவனது நிலம்
ஒற்றையடிப் பாதையாகிவிட...
இனித் தேடல்கள் ஏதுமற்ற
ஒரு சருகை...
காற்றின் துணையோடு
அழைத்துச் செல்கிறது மழை.