பருவம் பொய்த்த மழை

மும்மாரி பெய்து
முப்போகம் விளைந்த பூமி
கோடையிலும்
ஈரம் கசியும் உழவுக்காடுகள்
களம் களமாய் போரடித்து
குவிந்த தானியங்களால்
களஞ்சீயமானது வீடு!
அள்ள அள்ள
குறையாத அமுத சுரபிககளாய்
தொம்பைகளும்,.பத்தாயங்களும்....

காவிரி-
தென்னகத்து வயல்கள்
தெவிட்டாமல் பால் பருகிய
ஒற்றை முலை!
வற்றியதால் வசதியானது
மணல் குவாறிகள்!
வெடித்த நிலங்களில்
வேர் செத்த பயிர்கள்!
வங்கி கடன்களுக்கு
வட்டியாகி.றது
கண்ணீரும், ஏக்கங்களும்!

இன்று வரும்
நாளை வரும்
என்கிறது விஞ்ச்ஞானம்...
சொட்டுநீரின்றி
எச்சில் விழுங்கும்
விவசாயம்!!

தப்பியும் வரலாம்
தள்ளியும் வரலாம்
"பருவம் பொய்த்த மழை"....!

எழுதியவர் : தென்றல் ராம்குமார் (12-Sep-16, 1:02 pm)
பார்வை : 106

மேலே