கவியின் கவிதை
உள்ளத்தில் உள்ள
உணர்வுகள் பொங்கி
வழிகின்ற வேலையில்
என்ன செய்வதென
தெரியாமல்
திகைத்திருந்தேன்,
மதுவை எடுக்கலாம்
என நினைத்தேன்
ஆனால்
"மாது என் கண்களை
மறைத்தாள்"
உணர்வுகளை
வார்த்தையாக
எழுதினேன்
உலகம் அதனை
கவிதை என்றது!
பிறகு,
காதலிக்க
ஆரம்பித்தேன்
கவியே
உண்னையல்ல
கவிதையை...!