தியாக திருநாள்

தியாக திருநாள்

கனவால் சோதனை
தன் மகனை
தானே பலி தருவதாய்
வந்த கனவால் சோதனை

வெறும் கனவல்ல இது
இறை கட்டளையென
மகனிடம் சொல்ல

தந்தை கனவு பலிக்க
உயிர் துறக்க
மகனும் சம்மதிக்க

பாசம் தடுக்கலாமென
கண்ணை கட்டி
கட்டாரியை ஒங்க

இறைவன் தன் தூதன்
அனுப்பி தடுத்து
நிகழ்வின் நினைவாக
ஆட்டினை பலியிட்டு
பங்கிட்டு புசிக்க
செய்த நாள்
தியாக திருநாள்

தவமிருந்து பிள்ளை கிடைக்க
தந்தவனே பலியும் கேட்க
தியாக உள்ளம் கொண்டு
மகனை அர்ப்பணிக்க
துணிந்த தியாகத்தை நினைக்க
தியாகத்தின் உன்னதத்தை
உணர்ந்தும் இந்த தியாக திருநாள்

எழுதியவர் : ரா தி ஜெகன் (13-Sep-16, 10:41 am)
Tanglish : thaiyaga thirunaal
பார்வை : 511

சிறந்த கவிதைகள்

மேலே