அவள் கொண்ட அழகு

வெண்மேகமே
வெட்கப்படும் முகம் அவள்
முகம் .............
தேய் பிறையிலும்
தேயாதது அவள் முகப்பொலிவு ............

கருமேகமே
கண்டிராத
கருமை அவள் கூந்தல் ............

எந்த ஆடவனையும்
கண்ணிமைக்காமல் பார்க்க வைக்கும்
அவள் கண்ணழகு..............

நேரம் அதிகம் எடுத்து
நேர்த்தியாக செய்தானோ பிரம்மன்
நேரான அவள் மூக்கை
வளைவு நெளிவு இல்லாமல் ................

உண்ணாமலும்
உறங்காமலும் எதிர்பார்த்து காத்திருக்கும்
சிலரின் எதிர்ப்பார்ப்பு அவள் உதடு
உதட்டு சாயம்
உதவாமல் போகும் அவள் சிவந்த
உதடுகளுக்கு ..............

கவினர்கள் பலர் பெண்களின்
கழுத்தழகை சங்கென உவமையில்
பல முறை
வர்ணித்தாலும் புது வார்த்தை இல்லை
எனக்கும் அவள் கழுத்தழகை வர்ணிக்க
சங்கழுத்துடையாள் என்பதே சால சிறந்தது
அவளுக்கும் .............

காடு செல்ல காத்திருப்பவனையும்
கட்டிலில் இருந்து குதிக்கவைக்கும்
அவள் முன்னழகு ..........

அவள் கொண்ட இடையின்
வளைவு நெளிவுகளில்
வழுக்கி வீழ்ந்து
வாய் பிளக்கும் காளையர்கள்
கூட்டம் பலர் ...................

இவள்
பின்னழகை காணாதவர்கள் தான்
அன்னத்தின் நடையை வர்ணிப்பர் ...........

அவள் அனுமதி இன்றி
வர்ணித்தேன் அவள்
அழகை
மன்னிப்பு கேட்க
மனம் இல்லை அவளிடம்
மன்னிப்பாயா என்னை என்றேன்
மனதுக்குள்ளே ..........

எழுதியவர் : அன்னை ப்ரியன் மணிகண்டன் (14-Sep-16, 9:43 am)
Tanglish : aval konda alagu
பார்வை : 1170

மேலே