போதுமடி நீயெனக்கு - ப்ரியன்
மாதம் மும்மாரி
பொழிந்திட்ட
காலம் மறைந்து பல
நாளாயிற்று
••••••••••••••••••••••••••••••••
பசுமை போர்த்திய
வயல்வெளிகள்
காய்ந்து வெளிறிய
நிறமாயிற்று
••••••••••••••••••••••••••••••••
சென்றயிடத்திலாவது
நன்றாய்யிருக்குமென
வளர்த்த கால்நடைகள்
விற்றாயிற்று
••••••••••••••••••••••••••••••••
பெரிதாய் நினைத்து
படிக்க, வேலைக்குமாய்
தேடிச்செல்ல ஊரே
காலியாயிற்று
••••••••••••••••••••••••••••••••
வயிற்றுக்கு கஞ்சியூற்ற
வாய்காவரப்பை விற்று
வருமானம்பார்ப்பது இப்போ
வழக்கமாயிற்று
••••••••••••••••••••••••••••••••
உழைக்க விரும்பி
வழியின்றி உழவைதுறந்து
பிழைக்க தெரியாமல்
கிடக்கின்றோமிங்கே சிலர்
நாதியற்று
••••••••••••••••••••••••••••••••
இருந்தும் போதுமெனக்கு
நான் வாழ
வரண்ட தேசத்தில்
பனித்துளியாய்
உந்தன் புன்சிரிப்பு.
••••••••••••••••••••••••••••••••