படைத்தவன் யார்

இன்று வானில் எத்தனையோ செயற்கை கோள்கள்

உலாவி வருகின்றன ; இவற்றில் யாரும் இருப்பதில்லை

இவை எல்லாம் மனிதனே உண்டாக்கி விண்ணில் விட்ட

விண் கலங்கள்!

இவற்றை நாம் படைத்தோம் என்று பெருமை கொள்கிறோம்


அதே விண்ணில் எண்ணில் அடங்கா கோள்கள்

மற்றும் விண் மீன்கள் உள்ளனவே இவற்றை

படைத்தவன் ஒருவன் உள்ளான் அவன்தான் இறைவன்

என்றால் நம்மில் பலர் ஏற்றுக்கொள்வதில்லையே ஏன்?

ஒவ்வொரு படைப்பின் பின்னால் படைத்தவன் உண்டு ;

மண் குடத்தை படைத்தவன் குயவன் என்பது போல்


எப்படி நாம் படைத்த செயற்கை கோள் நாமில்லாது

விண்ணில் அந்தரத்தில் எங்கோ சுற்றி திரிகின்றதோ

அது போல் விண் மீன்கள் கோள்கள் படைத்து

விண்ணிலே சுற்றவைக்கும் இறைவன் நம் பார்வைக்கு தெறியாது

எங்கோ இருக்கின்றான் இதை அறிந்திடல் வேண்டும்
நெஞ்சில் நிலை நிறுத்திடல் வேண்டும்
அவன் இன்றி நாம் இல்லை என்பதை
பொய்யா மொழி என்று ஏற்றிடல் வேண்டும்


படைத்தவன் இல்லாமல் படைக்கப்பட்டவை இல்லை

தான் தோன்றி என்பது இறைவனுக்கு மட்டும்தான் உண்டு

----------------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Sep-16, 9:44 am)
Tanglish : padaitthavan yaar
பார்வை : 195

மேலே