என் ஓட்டம் என் இலக்கு

எண்ணம் போல் வாழ்வு என்ற ;
எதார்த்தத்தை மறுக்கிறான் !
எதிரில் வரும் யாவரையும் ;
எதிரியாக பார்க்கிறான் !
ஆறடி நிலத்தை மறந்து ;
அகிலமெல்லாம் தேடுறான் !
அன்பு செலுத்த மனிதனின்றி ;
அல்லோல படுகிறான் !
விட்டு தர மறுத்துவிட்டு ;
விறல் நுனியில் தேடுறான் !
கணினி முன்னே இருந்துகொண்டு ;
காலவேகத்தை கூட்டுறான் !
இலக்கை அடைந்த மனிதனும் ;
இல்லை இந்த உலகிலே !
இறுதி வரை ஓடுறான்;
இயல்பை மறந்து வாழறான் !
இலக்கை மறந்த ஓட்டம் கூட ;
இறுதியிலே தோள்விதான் !
இருப்பவரோடு பழகலைன்னா ;
இறுதி வாழ்வும் கேள்விதான் !