கிராமத்து காதல்
ஆத்தங்கர ஓரத்துல
அந்தி சாயும் நேரத்துல
அத்தமக ஒன்னப் பாக்க
ஒத்தப் பனமரமா காத்திருக்கேன்...
கொடியில பூக்குர மல்லிகையாய்
மனசுதான் பூத்திருக்கேன்...
வெரசா நீயும் வாடி...
வெளையாடலாம் ஓடி....... (21)
ஆத்தாளுக்கு தெரியாம
காத்தாலெ நான் வந்தேன்...
இராசாவே ஒன்னக் காணாம
நெஞ்சுக்குழி வேத்துப் போனேன்...
கண்ணுமுழி கசங்கிப் போனேன்...... (14)
கொஞ்சுங் கிளியே கோவப்படாதே...
மாமன் நெஞ்சம் வலி தாங்காதே......
பேசியே ஆள மயக்குர மச்சானே...
தூசியா கோவம் பறந்துடுச்சே...... (14)
இராசாத்தி ஓஞ்சிரிப்பு
இராவெல்லாம் வாட்டுதடி...
மஞ்சத்தாலி கழுத்திலேற
என்உசுரு கட்டளப் போடுதடி...
கடவுளையும் வேண்டுதடி...... (11)
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
