சர்வதேச நதிநீர் பங்கீட்டுச்சட்டம் சொல்வது என்ன

" நதி எங்கே போகிறது, கடலைத்தேடி.! "

ஐரோப்பாவில் ரைன் நதியைப் பயன்படுத்துவது தொடர்பாக ஜெர்மன், பிரான்ஸ், லக்ஸம்பர்க், நெதர்லாந்து நாடுகளுக்கிடையே சிக்கல்கள் எழுந்தபோதும்,

ஆப்ரிக்காவில் நைல் நதி பங்கீடு தொடர்பாக சூடான், எகிப்து நாடுகள் முட்டிக் கொண்ட போதும்,

டான்யூப் நதி பங்கீட்டில் ஆஸ்திரியா, துருக்கி, வட அமெரிக்க மாகாணங்களுக்குகிடையே நதிநீர் சிக்கல் வந்த போதும்,

தென் அமெரிக்காவில் அமேசான் நதி பிரச்னை விஸ்வரூபம் எடுத்தபோதும்,

ஆஸ்திரேலியாவில் முர்ரே நதிப் பங்கீடு தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா மோதல்கள் வெடித்தபோதும்,

ஆமுர் நதி நீர் பங்கீட்டில் சீனா, ரஷ்யா இடையே உரசல் என பல பிரச்னைகள் சர்வதேச நதிநீர் சட்டத்தின் அடிப்படையிலேயே தீர்க்கப்பட்டிருக்கின்றன.

அட அவ்வுளவு ஏன் ?
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 1960ல் போடப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் இன்றுவரை ஏன் மதிக்கப்படுகிறது ?

சர்வதேச நதிநீர் சட்டம் அப்படி என்னதான் சொல்கிறது ?

எந்த ஒரு நதியானாலும் கடைமடை பகுதி மக்களுக்கே அதிக உரிமை அந்த ஆற்றில் உண்டு என்கிறது சர்வதேச நதி நீர் பங்கீட்டுச்சட்டம்.

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது காவிரி ஆறு.

இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ரூரல், சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாவும் .......

தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகாரில் கடலில் கலக்கிறது.

800 கி.மீ நீள காவிரி ஆறு 320 கிமீ கர்நாடகத்திலும், 416 கிமீ தமிழகத்திலும், 64 கிமீ தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே உள்ள பொது பார்டராகவும் இருக்கிறது.

காவிரி ஆற்றில் அதிகப்படியான உரிமை கர்நாடகாவைக்காட்டிலும் தமிழகத்திற்கே உண்டு.

கன்னடர்கள் அடக்கி வாசித்தால் அவர்களுக்கு நல்லது.ஆதிவாசிபோல் நடந்துகொண்டால் மிச்சம் மீதிகூட அவர்களுக்கு இல்லாமல்போகும்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (15-Sep-16, 12:15 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 260

மேலே