காதல்
உண் கண்ணில்
கண்ணீரை
கண்டு
ஏன் என்று
கேட்டேன் அன்று
ஆனந்தக்
கண்ணீரென்றாய்
யாது காரணம்?
என கேட்டேன்
நீதான் என்றாய்.
என் விரல்
கொண்டு
துடைத்து
பைத்தியம்
என்றேன்
சிரித்தபடி
ஆம் உன்
மீதென்றாய்
என் ஆருயிர்
நீயென்றே!
அகமகிழ்ந்தேன்
இனி உன்
கண்கள்
கண்ணீர் சிந்த
காரணமாகக்
கூடாது என்று
முடிவெடுத்தேன்!
விதியின்
விளையாட்டு
அதிரடியாய்
தாக்கியது
இன்று என்
கண்ணில் கண்ணீர்
துடைப்பார் இன்றி
விட்டு விட்டேன்
வற்றும் வரை
வரட்டுமென்று!
#sof #sekar