இரட்டிப்பாய் துடிக்குதடி இதயம்
இரட்டிப்பாய் துடிக்குதடி இதயம்
இதற்கு காரணம் உன் உதயம்.
இதழ் இணைந்திருக்கும் தருணம்
இதையே வேண்டுகிறேன் தினமும்.
நெஞ்சுக்குள்ளே நிகழுதடி யுத்தம்
அதை அறியத் துடிக்கிறது சித்தம்
ஆசையாய் நீ கொடுத்த முத்தம்
அதில் ஏங்கிக் கிடக்கிறேன் நித்தம்.
உனைக் காண உள்ளம் துடிக்குது
கண்ட பொழுதில் திகைக்குது
காலில் கொலுசோ ஒலிக்குது - உன்னைக்
கட்டிக் கொள்ள அழைக்குது.
எனக்குள் எரியுதடி காதல் அனல்
அதை அணைத்திடும் உன் தேகப் புனல்
காதலில் கண்டேன் உச்சம்
காரணம் உன் உதட்டின் மேல் மச்சம்.
என்னுள் விழுந்த விதையே! - நான்
எண்ணினேன் நிதமும் இதையே!
என் கண்ணில் கடந்த புயலே! - அதைக்
கண்டு ஆடிய மயிலே!
கண்ணீர் எனும் கடல் வழியே
காதலைக் காட்டிய முகவரியே!
காலம் நேரம் காதலில் ஏதடி
கட்டளை இடுதே உன் கண்களடி.
சேலை மூடிய சோலையே! - உனைக்
காண்பதே என் வேலையே !
கண்கள் எனும் கதவு வழி - நாமும்
மாற்றிக் கொண்டோம் இதயமடி........