காதல் என்பது வலியா
காதல் என்பது வலியா? - இல்லை
கனவு தேசத்தின் வழியா?
கண்களில் உள்ள ஒளியால் - என்னை
நகலெடுத்தாய் இது சரியா?
ஆசையில் உதித்தாய் நிலவாய் - உன்னில்
ஆனந்தம் தேடினேன் சுகமாய்
இசையில் சேர்ந்த கவியாய் - உன்
இதழ்கள் இனிக்குது கனியாய்.
மஞ்சம் தேடிய மலரே!
மயக்குது உந்தன் அழகே!
வாசல் வந்த நிலவே! - உன்
வாசம் தேடுதே மனதே!
தேடி வந்த உறவே!
தேவதையானாய் பிறகே
நட்சத்திரங்களின் தொகுப்பாய்
நாளும் நீயே அணிவகுப்பாய்.
இமயமலையும் சிறிதானதே! - உன்
இமையும் எனக்கு பெரிதானதே!
இமைகள் மூடிய உன் விழிகள் - நாளும்
இனிமையாய் தருதே வலிகள். ....