பஞ்சு மிட்டாய் உடம்புகாரி

பஞ்சு மிட்டாய் உடம்புகாரி
புடிச்சிக்கிட்டா உடும்புமாறி
பஞ்சும் நெருப்பும் கிட்ட வச்சி
பத்த வைச்சா வத்திக்குச்சி.

பள்ளமான மனசுக்குள்ள
கப்பல் விட்டா சின்னபுள்ள
நெஞ்சுக்குள்ள மெல்ல மெல்ல
நீயும் தந்த பெரும் தொல்ல.

கனவுக்குள்ளே நீ வந்து
பாடிப் போனாய் காதல் சிந்து
ஆற்றோரம் ஆலமரம்
பாடுதே காதலின் ஏழாம் சுரம்.

ஆத்துக்குள்ள மீன் பிடிக்க
அந்த நேரம் இடிஇடிக்க
ஓடி வந்து எனை அணைக்க
வந்தது காதல் மண்மணக்க.

ஆசைகள் எனும் நீரூற்று
அதுக்குள் பாயுது தேனூற்று
ஆயிரம் குயில்களின் தாலாட்டு
கேட்கிறேன் நாளும் உன் பாட்டு.

உன்னைக் காணவே வேணும்
எனப் பாடுவேன் ஆயிரம் கானம்
மாலைகள் மாற்றிட வேணும்
அதை ஏங்கி தவிக்கிறேன் நானும்.

கண்ணுக்குள்ளே கலவரம்
கடவுள் தந்த புது வரம்
உனக்கும் எனக்கும் சுயம்வரம்
எண்ணியே வாழ்கிறேன் அனுதினம்...

எழுதியவர் : தங்கமணிகண்டன் (16-Sep-16, 11:52 pm)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
பார்வை : 73

மேலே