நண்பருக்குப் பணி நிறைவுப் பாராட்டுக்கவி

13 - 11 - 1956 அன்று
பிறந்த ஒரு மலை
அனைவருக்கும் அன்பினை
அள்ளித் தரும் மலை
மனித உருக்கொண்டு
நெஞ்சுயர்த்தி வரும்மலை

அனைவரும் கண்டு
அதிசயிக்கும் பெருமலை
தவறு கண்டு
பொங்கியெழும் எரிமலை
கவிபுனையும் திறன்கொண்ட
வரிமலை

குழந்தை முகம் கொண்ட
சிறுமலை
உறுதியான அகம் கொண்ட
கருமலை
சிங்கமே அஞ்சும் கண்டால்
உன் உறுமலை
உன் பெயர்தான் திருமலை


நீ வலக்கையில்
மோதிரம் கொண்டவன்
எந்தத் துயரையும்
எதிர்த்து மோதும் திறன் கொண்டவன்

நீ மாத்தூரில்
பிறந்த மா தேர்
கூடப்பக்கம் வளர்த்தெடுத்த
பூத்தேர்

நீ கார்த்திகையில்
பூத்ததாலோ
இந்தப் பார் உனைக்கண்டு
திகைக்கின்றது
மகிழ்வில் நகைக்கின்றது

நீ தொழிற்சங்கம்
வளரப் பாடுபட்ட தொழிலார்ச்சிங்கம்
உன் தோல்அங்க வண்ணத்திடம்
தோற்று நிற்கின்றது தங்கம்

நீ பல சுமைகளைத்தாங்கிய
எருது
உன்னால் கிடைத்ததல்லவா
ETP க்கு பசுமை விருது

நீ வணங்கும் கருநீலக்கண்ணனைவிட
மேலாய் மதிப்பதோ நவநீதக்கண்ணனை
நீ அவரது வலக்கை
அவர்தான் ஏற்றிவைத்தார்
உன் வீட்டு விளக்கை

ஐயன்குட்டிப்பாளையத்தில்
வசிக்கும் ஐயனே
உன்போல் ஒரு அயனை
மகனாய்ப் பெற்றதால்
பெருமை கொண்டார் கண்ணய்யனே

உன் இதயம் மனைவி
உன் உதயம் மகள்
உன் சதயம் பேரன்
உன் தடயம் பேத்தி

நீ நல்ல பூக்களாய்ப்
பல நட்புக்களைப் பெற்றவன்
பாண்லேவின் நன்மைக்கு
உழைத்த கொற்றவன்

பாண்லே நிலத்தினை
உழவு செய்து வாழை வைத்தவன் நீ
பலருக்கு நிஜத்தினில்
உதவி செய்து வாழவைத்தவன் நீ

நீ திறந்த மெய்யும்
திறமையும் ஒருசேரப்பெற்ற திருமலை
உன் திடப்பேச்சு உனக்கு மட்டுமே
வாய்த்த அருங்கலை

பாரில் கைகேயிக்குப் பிறந்த
பரதன் அல்ல நீ
பார்வதிக்குப் பிறந்த
வரதன் நீ

நீ அருமையாய்ப்
பணிசெய்த அற்புத வயல்கனி
இன்றோடு நிறைவதோ
உன் அறுபது வயதுப்பணி
உன் பிரிவோ எங்களுக்கு சனி
உன்போல் யார் உழைப்பார் இங்கே இனி
பிரிந்தாலும் அடிக்கடி வந்து
எங்கள் சோகத்தைத் தனி

மலையே
திருமலையே
நீ மாதவன் கழுத்து
மாலையே
உனக்காக என் அன்பால்
சூடுகின்றேன் இந்த எழுத்து
மாலையே

உங்கள் தலைசிறந்த
பணிநிறைவிற்கு
எங்கள் தலைவணங்கி
வாழ்த்துகின்றோம்

எழுதியவர் : குமார் (17-Sep-16, 5:10 pm)
பார்வை : 188

மேலே