என் அன்பு தோழிக்கு
![](https://eluthu.com/images/loading.gif)
என் அன்பு தோழிக்கு.......
உனக்காக கவியொன்று
எழுதிடவே நினைத்தேனடி
நானும்.....
தலை நிமிர்ந்து நின்ற
என் எழுதுகோலும்
தலை வணங்கி நின்றதடி
உன் நட்பின் முன்னே.....
பூக்கள் கோர்த்தே
உனக்கொரு பூமாலை
செய்திட நினைத்தேனடி
பூக்களும் உன் அழகின்
முன்னே
தலை குனிந்து
மண்ணை முத்தமிட்டதடி....
உன் நட்பினை நானும்
சொல்லிடவே
வார்த்தைகள் வசப்படவில்லையடி
என் காகிதமும் என் கரங்களுக்குள்
அகப்படவில்லையடி....
சாலையோரத்தில் தொடங்கிய
நம் நட்பு
சாரல் வீசுகிறது
இன்றும் நம் மனங்களில்
தூறலாக தூவட்டும்
காலமெல்லாம் நம்
இருவர் நெஞ்சங்களில்....
மழலை சிரிப்பும் உன் சிரிப்பில்
தோற்றதடி
வஞ்சகமற்ற உன் மனம் முன்னே
பிஞ்சு மனம் கொண்ட பிள்ளையதுவும்
பிச்சை வாங்குதடி....
தாய்க்கும் மேலாய் உன்
தாய்மொழியை நேசிப்பவளே
உன் உயிருக்கும் மேலாய்
உன் மொழியை
சுவாசிப்பவளே....
காகிதத்தில் உறங்கிக்கிடந்த
என் கவிகளுக்கு
உயிர் கொடுத்தாயடி நீயும்
உலகம் அறிய செய்தே
என் ஊன்றுகோலாய்
நீயும் நின்றாயடி.....
நன்றி என்ற ஒரு வார்த்தையில்
உன் கடனை நானும்
அடைத்திட முடியுமாடி
என் அகத்திலிருந்து நாவினால்
நான் கூறினாலும்
உன் நட்பிற்கு ஈடாகுமாடி....
வார்த்தைகள் இல்லையடி
உனை வாழ்த்திடவே
என்னிடத்தில்
வார்த்தைகள் இல்லையடி...
என் மரணம் நீ காணும்
வேளையிலே
உன் விழிகள் கண்ணீர்
சிந்தினால்
அது ஒன்றே எனக்கு
இப் பிறவியில் போதுமடி...
உன் விழியின் நீரை நீயும்
துடைத்திட வேண்டாமடி
அதை உன் கரத்தினிலே
அடைகாத்துக் கொள்ளடி
அது வெறும் துளியல்ல
நம் நட்பிற்கு கிடைத்த
விலைமதிப்பற்ற
அடையாளாச் சின்னமடி...
என் கல்லறை தாண்டியும்
நம் நட்பு
என் நெஞ்சினில் வாழ்ந்திட
வேண்டுமடி....
காவியமாக வேண்டாமடி
நம் நட்பு....
உன் மரணம் கடந்தும்
உன் மனதில் வாழ்ந்திடும்
வரம் ஒன்றே போதுமடி
என் கல்லறை மீதே
புன்னகை பூவாய் நானும்
மலர்ந்தே உயிருடனே
இவ் உலகில் வாழ்வேனடி....
என் கவிகளுக்கு உயிர் கொடுத்த என் அன்பு தோழியின் பிறந்த நாள் இன்று....அவள் எனக்காக நிறையவே செய்திருக்கின்றாள்....நான் அவளுக்காய் எதுவும் செய்ததில்லை இதுவரை....என்னால் முடிந்தது அவளுக்காய் கவி ஒன்று மட்டுமே.....மீண்டும் அவளுக்காகவே நான்.......
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் தோழி....என்னுடன் இணைந்து நீங்களும் என் தோழியை வாழ்த்திடுங்கள்.....
என்னை மீண்டும் எழுத அழைத்த அனைத்து உள்ளங்களுக்கும்.....என் மனம் திறந்த நன்றிகள் என்றென்றும்........
-அன்புடன் சகி-