நீ வேறா நான் வேறா - ஈவெரா

நீ வேறா? நான் வேறா? -
சிந்தை கேட்ட ஈ.வெ.ரா ...
அவனே தாசி ஆக்கினான்
அவன் காமம் தீர்த்துக்கொள்ள ...
அவனே தூற்றினான் தாசியென்று!!
அவன் எச்சிலை காரி உமிழ்ந்து ..
அவள்மீது அசுத்தம் என்றான்!!
கடவுளை கைகூப்பி
காரணங்கள் சொன்னான்
எழுதப்பட்ட விதியென்று!!
அறியாமை சூழ்ந்துகொள்ள
கடவுளும் மறைந்து கொண்டார்!!
கூட்டமாய் சேர்ந்துக்கொண்டு
கொடியசைத்து குடியேற்றி
தாசி குலமென்று குறைகூறினார்கள் ...
பெண்ணினத்தின் சிலரை
பெருமையாக தரம்பிரித்து
காமத்தை கழிக்கும்
வீதியொன்று விலைப்பேசி
விலைமாதுகள் முகமென்று
உயிலென எழுதி விட்டு
சென்றகூட்டங்கள் எங்கே ??
சாதிகள் என்னும் சாக்கடையில்
மனிதர்களை தினித்து
புழுக்களுக்கு பெயர்சூட்டிய
முட்டாள் கூட்டம் எங்கே??
அன்றைய நிலையின்
எண்ணிக்கை இது போல்
இன்றும் எத்தனையோ??
தலையெழுத்தின் விரிவாக்கத்தை
பகுத்தறிவால் எழுதி
தாசிமுறையை தகர்த்தெறிந்து
தீண்டாமைச்சுவர் உடைத்தெறிந்த விடிவெள்ளி
அவர் ...
நீ வேறா? நான் வேறா?
சிந்தை கேட்ட ஈ.வெ.ரா
இன்றும் நம் பகுத்தறிவுச்சுடராய்
திசைகாட்டுகிறார் நம் மனிதம் நோக்கி ....
* மருதுபாண்டியன். க