முதல் முத்தம்
என்னவளே என்னிடத்தில்
முதல் முறையாக
முத்தம் ஒன்றை
பதித்தபோது
உயிரே உன் மூச்சை
என்னுள் சுவாசமாக
வைத்தாய்!
அழகே
உன் சுவாசம்
என்னுள் உயிராக
இருப்பதாலோ
என்னவோ!
இன்று
என்னை விட்டு
நீ பிரிந்த பிறகும்
உன் மூச்சு சுவாசமாக
என்னுள் கலந்து
என்னை விட்டு
பிரிய மறுக்கின்றது
என் உயிரே...!