16 - 9-16 =தினம் ஒரு காதல் தாலாட்டு - தனிமை = 83 - 225
பூமித்தாயின் தாகம் தனிக்கும் மழைமகளே வா..!
வானதேவன் மானம் காக்கும் மருமகளே வா…!
வானம்பாத்த பூமிமீது உனது தூறல் விழும்போது
ஏங்கிகிடக்கும் விதைகளுக்கு விமோட்சனம் கிட்டுது
கண்கள் ரெண்டும் காதல் தேடும்
காதல் கனிந்தால் காமம் தேடும்
நெருப்பு மெல்ல பத்துதல்போல
பொத்திவச்ச காதல் பத்திக் கொள்ளும்
பெண்ணின் சில்லுக்கு மதிப்பு அதிகம்
மண்ணில் அதுக்கு ஆண்கள் அடக்கம்
விண்ணில் தேவரும் விழுந்த கதைகள்
எண்ணிலடங்கா இன்ப விருந்துகள்.!
காம கதிர்கள் பெண்ணுக்கே அதிகம் – அதை
அடக்கியாள்வதில் அவளுக்கு ஆர்வம் அதிகம்
எத்தனை நாளைக்குதான் அடக்கி வைப்பாள்
அதற்காண நேரம் வந்தால் போட்டு உடைப்பாள்
பெண்ணென்ற ஜீவன் இல்லையென்றால்
ஆணென்ற ஜீவனுக்கு ஏது இன்பபொழுது
ஆணென்ற ஜீவன் இல்லையென்றால்
பெண்ணென்ற ஜீவனுக்கு அமையாது வாழ்வு..