தற்காலிக உலகில் வாழும் மனிதனே

உலகம் என்பது தற்காலிகமாக மனிதனுக்கு இருப்பிடமாக இறைவனால் படைக்கப்பட்ட அழியும் இடமாகும் என்பதை மறந்து உலகம் என்றும் நிலையான இருப்பிடம் என்று நம்பிக்கைக் கொண்டு வாழும் பலரின் நோக்கம் தற்காலிகமாகும் என்பதை மறந்திடக்கூடாது.

காலமும் நேரமும் உலகில் எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்தின்றதோ அவ்வாறே பாவமும் நன்மையும் மனிதனிடத்தில் பாரியதொரு மாற்றத்தை அவன் வாழும் வரையிலும் உண்டாக்கிவருகின்றது என்பதை நன்றாக விளங்கி நாம் உலகில் இயங்கி வாழவேண்டும்.

இறைப்பற்று என்று கூறி கூத்தடிக்கும் பலரின் முகமூடிகளை இறைவன் மிக விரைவில் வெளிக்கொண்டு வருவான் என்பதை அந்த முகமூடி அணிந்திருக்கும் கயவர்கள் மறந்து விடுகின்றனர் அதனாலேயே இறை உபதேசங்களை மறைத்து சுய உபதேசத்தை போலியாக பரப்புகின்றனர்.

பொங்கி எழும் மனிதனாக வாழ்வதை விட பொறுமையுடன் வாழ்வதே ஒரு மனிதனுக்கு சிறந்ததாகும் ஏனெனில் பொறுமை என்பது இறைவனுக்கு மிகவும் பிடித்தமான ஒரு செயலாகும் என்பதை உலகில் வாழும் மனிதர்கள் யாவும் அறியவேண்டும் என்பதே இறைவனின் நோக்கமாகும்.

ஒரு மனிதனுக்கு என்றும் நிலையான சம்பாதிப்பு என்னவென்று பார்த்தால் சக மனிதனிடம் அவன் காட்டிய அன்பு, அரவணைப்பு, உதவும் குணம், தோல்கொடுக்கும் எண்ணம் மேலும் இன்னும் எத்தனையோ அம்சங்கள் இருகின்றனர் என்பதை முதலில் நாம் அனைவரும் அறியவேண்டும்.

எழுதியவர் : அப்துல் ஹமீட் (17-Sep-16, 9:15 pm)
சேர்த்தது : அப்துல் ஹமீட்
பார்வை : 65

மேலே