ஈவாளா ஏவாள்
பாதையோரத்தில்
பசித்தவன் பிச்சை கேட்கிறான்
உணவுப் பிச்சை !
இவள்
பார்வையோரத்தில்
நான் பிச்சை கேட்கிறேன்
காதல் பிச்சை !
நிக்கல் போட்டால்
வள்ளல் என்று வாழ்த்துகிறான்
பிச்சைக்காரன்
இவள் வள்ளலா கஞ்சளா ?
ஈவாளா இந்த ஏவாள் ?
---கவின் சாரலன்