மனைவியின் டென் + டூ கட்டளை

*நான் எங்க அம்மா வீட்டுக்கு
போறேன்.

குழந்தைகளையும் அழைச்சிட்டு
திரும்பி வர
பத்து நாளாகும்.
-------------------
1::
நண்பர்களை அழைத்து
கொட்டமடிக்க வேண்டாம்.
போனமுறை
சோஃபா பின்னாலிருந்து ரண்டு பாட்டில் மூடி
நாலு ஓட்டல் பில் எடுத்தேன்.
--------------------------
2::
பாத்ரூம் சோப் கேசில
மொபைல மறந்து வச்சிராதீங்க.
போன முறை தேடி
அலைஞ்சப்ப
நான் கண்டு எடுத்தேன்..
-------------
3::
மூக்குக்கண்ணாடி
அதன் பாக்சில் வைக்கவும்.
போன முறை
ஃப்ரீட்ஜில் இருந்தது.
-----------------
4::
வேலைக்காரிக்கு
சம்பளம் தந்தாச்சு.
உங்க தாராள
மனப்பான்மையை
அவளிடம்
காட்ட வேண்டாம்.
-----------------
5::
காலைல
பக்கத்து வீட்டுக்கு
பேப்பர் போட்டாச்சான்னு
அவங்களை தொந்தரவு
செய்ய வேண்டாம்.
நம்ம பேப்பர்காரன்
வேற மாதிரி.
-----------------
6::
சமையல் கட்டு
பக்கம் போக
வேணாம்

ஸிங்க
காக்கா கலருக்கு
மாத்தினீங்கன்னா
சும்மா இருக்க
மாட்டேன்
(பூரி கட்டை ஞாபகம்
இருக்கட்டும்)
----- --------
7::
வாக்கிங் போறச்சே
டீ ஷர்ட்
போட்டுக்கோங்க
ஜிப்பா வேணாம்

ஜிப்பா கலர்ல
என்னோட
Free size சுடிதார்
டாப்ஸ் இருக்கு

அனிதா அன்னிக்கு
வழிச்சிண்டு
சிரிச்சா
-------
8::
க்ரெடிட் கார்டு
Cash box சாவி
எங்கிட்ட இருக்கு...

பீரோவ
உருட்ட வேணாம்
---------
9::
ரெண்டு Securityக்கும்
நூர் நூறு ரூபா
கொடுத்திருக்கேன்

நீங்க லேட்டா வந்தா Gate தெறக்க
*வேண்டாம்னுட்டு*
---- ------- -
10::
உங்க உள்ளாடைகள்
பீரோவில் வலது புறமும்
குழந்தைகளோடது
இடது புறமும் இருக்கு.

மாத்தி போட்டுட்டு
Uncomfortable-ளா
இருந்ததுனு அப்புறம் ஆஃபீசுலிருந்து
புலம்பாதீங்க..
-----------------
11::
அன்னன்னிக்கு
அவுத்து போடறத
தண்ணில நெனச்சு
காயப்போடுங்க...

கைரேகை தேய்ந்து
போய்டாது..
-----------------
12::
இரவு 10 மணிக்கு மேல
Laptopஐ மூடிக்கிட்டு
உறங்க போயிருங்க..

மறுநாள் ஆபீசுல
தூங்கி வழிய
வேண்டாம்.
------------------
முக்கியமா கடேசியா
ஒண்ணு.

ரொம்ப புத்திசாலித்தனமா
நடந்துக்கறதா நினச்சி
ஏடாகூடமா
ஏதும் பண்ணி
எங்கிட்டா மாட்ட
வேணாம்.

நான் எப்ப வேணாலும்
திரும்பி வந்துருவேன்.
முன்னறிவிப்பில்லாம. !!!
-----------------------

எழுதியவர் : முகநூல் (18-Sep-16, 10:33 am)
பார்வை : 474

மேலே