வாழ்க்கையின் ரசனை

வாழ்க்கையின் ரசனை

அதிகாலை பனித்துளியில் நடக்கப் பிடிக்கும்

ஆனால் தும்மல் வந்தால் பிடிக்காது

நேரத்தோடு அலுவலகம் செல்ல பிடிக்கும்

ஆனால் வேலைகளை முடித்து செல்ல முடியாது

மாலைப்பொழுதில் இயற்கையை ரசிக்க பிடிக்கும்

ஆனால் நேரம் கிடைக்காது

இரவு நேரங்களின் அமைதி பிடிக்கும்

ஆனால் தூக்கம் கெட பிடிக்காது

இப்படித்தான் ஒவ்வொரு மனிதனின்

வாழ்க்கையும் ரசனையின்றி போகின்றது.

எழுதியவர் : சுமதி பழனிசாமி (18-Sep-16, 11:00 am)
சேர்த்தது : sumathipalanisamy
Tanglish : valkaiyin rasanai
பார்வை : 129

மேலே