எதார்தம்

பரந்த வானமும்,
விரிந்த கடலும்
சண்டையிட்டு
தொலை தூரம்
பிரிந்து விட்டது
இனி வானமும்,
கடலும் இனைய
வாய்ப்பில்லை என்று
நினைத்திருந்தேன்
கவனத்தில்
கொள்ளவில்லை
கடல் வானத்தை
பிரதிபலிப்பதை
என் கண்
முன்னே பிரிந்த
இவர்கள்
தொலைதூரத்தில்
ஆரத்தழுவிக்கொண்டதை
கண்டப்பின் புரிந்தது
விலகலும்,சேர்தலும்
மாயையென்று
பிரதிபலித்தலும் கூட!
#Sof #sekar