உந் தம்பி பேரு தொப்புளா- உரையாடல் குறுங்கதை

தெனமும் சந்தோசமா பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு வருவ. இன்னைக்கு ஏண்டா விப்புள் தலயத் தொங்கப் போட்டுட்டு வர்ற?
##@@
நீங்க எனக்கு வச்சிருக்கற பேருதாம்மா காரணம்.
@@@@@#
என்னடா ஆச்சு விப்புள் செல்லம்?
@@@
அந்தப் பேரையே சொல்லாதம்மா எனக்கு வெக்கமா இருக்குது.
@@@
என்ன நடந்ததுன்னு சொல்லுடாச் செல்லம்.
@@@
நா பத்தாம் வகுப்பு படிக்கற பையன். என்னக் கொஞ்சாத. என்னோட வகுப்பிலே ஒரு இந்திக்காரப் பையன் இருக்கறான். அவம் பேரு மிதுன். அவன் இன்னைக்கு என்ன எம் பேரக் கிண்டல் பண்ணிட்டு சிரிக்கறான்.
@@@@@
என்னனு வெவரமாச் சொல்லுடா.
####
" ஏண்டா உம் பேரு விப்புள் உந் தம்பி பேரு தொப்புளா? டேய் நா இந்திக்காரன்தான். ஆனா எங்கப்பா சின்னப் பையனா இருக்கறபோதே எங்க குடும்பம் சென்னைக்கு வந்திருச்சே. எந் தாய் மொழி இந்தியா இருந்தாலும் என்னோட முதல் மொழிப் பாடம் தமிழ்ங்கறது உனக்கே தெரியும். நா இந்திய இந்திப் பிரச்சார சபாவிலே கத்துக்கிறேன். இந்தியாவிலேயே ரண்டு செம்மொழிகள்தான் இருக்குது. சமஸ்கிருதமும் தமிழும். தமிழ் ஏழு கோடி மக்களுக்குத் தாய் மொழி. சமஸ்கிருதம் வளமையான மொழியா இருந்தாலும் அதத் தாய் மொழியாப் பேசறவங்க 5,000 பேர்தான். உனக்கு சந்தேகமா இருந்தா விக்கிப்பீடியாவ்ல பாரு. தமிழ் மொழியின் சிறப்பை வெளிநாட்டு அறிஞர்கள் எல்லாம் பாராட்டறாங்க. ஏண்டா தமிழ் நாட்டில இருக்கற தமிழர்கள் இந்திப் பேருங்கள பிள்ளைங்களுக்கு வச்சு உ ங்கள நீங்களே அசிங்கப்படுத்திக்கறீங்க? தமிழ்ல அழகான பேருங்களுக்கா பஞ்சம்? உங்கள எப்பிடிடா வேற மாநில்த்துக்காரங்க மதிப்பாங்க" ன்னு சொல்லிட்டு, " உம் பேருக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா"ன்னு தெரியுமான்னு கேட்டான்.
@@###
அதுக்கு நீ என்னடா சொன்ன?
#@@@#
நா என்ன சொல்ல. உங்க இந்தி வெறி பெயர் மோகத்த நெனச்சு வெக்கப்பட்டு தல குனிஞ்சு நின்னேன். அவஞ் சொன்னான் "விப்புள் தொப்புள் தமிழர்கள் பெரும்பாலானவங்களுக்கு தாய் மொழிப் பற்றும் இல்ல; மொழி சார்ந்த இனப்பற்றும் இல்ல. உச்ச நீதிமன்றம் காவேரி ஆத்துல தண்ணி தொறந்துவிடச் சொல்லி உத்தரவு போட்ட ஒடனே அங்க உள்ள எல்லா கட்சிகளும் எணைஞ்சு போராட்டம் நடத்துனாங்க. இங்க நெல்லு வெளையற நெலமெல்லாம் வறண்டு கெடக்குதே ரண்டு மாசத்துக்கு முன்னாடியே காவிரி தண்ணீருக்காக போராடி இருந்தா கர்நாடகாவ்ல போராட்டமே நடந்திருக்காது. அங்க வன்முறை, சொத்து சேதம் எல்லாம் நடந்ததுக்கப்பறம் இங்க போராட்டம் நடத்தறாங்க. தாய்மொழிப் பற்றும் இனப்பற்றும் ஒற்றுமையும் இல்லாத தமிழர்களை மத்த மாநில மக்கள் எப்பிடிடா மதிப்பாங்க"ன்னு அவங் கேட்டான். நா என்ன சொல்லறது.
நாஞ் சொன்னேன்" மிதுன் நீ சொல்லறதெல்லாம சரிதாண்டா. மொதல்ல மெத்தக் கற்ற மேதைகளும் அரசியல்வாதிகளும் ஆசிரியர்களும் திருந்தினாத்தான் தமிழ் உருப்படும். நா என்னோட அம்மா அப்பாகிட்டச் சொல்லி எனக்கு நல்ல தமிழ்ப் பேரை வைக்கச் சொல்லப்போறேன்.
@#####
ஆமாண்டா செல்லம் அந்த இந்திக்காரப் பையனுக்கு இருக்கற அறிவுகூட எஙுகளுக்கு இல்லாம போச்சே. சரி அப்பா வீட்டுக்கு வரட்டும் நாஞ் சொல்லறென் அவர்கிட்ட.
@######@@@@#@@@@@##@@@@@#@
விப்புள்= அளவில் பெரிதான, பரந்து அகன்ற, தொலைவளாவிய, பெரும் அளவில் கிடைக்கின்ற, நிறைவு.
@@########################## சிரிக்க அல்ல; சிந்திக்க. மொழிப் பற்றையும் மொழி சார்ந்த இனப்பற்றையும் வளர்க்க.

என் பதிவு தவறு எனில் மின்னஞ்சலில் தெரிவியுங்கள். சில மணி நேரங்களில் விலக்கிவிடுகிறேன்.

எழுதியவர் : மலர் (19-Sep-16, 12:34 am)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 175

மேலே