பிச்சைக்காரன்
![](https://eluthu.com/images/loading.gif)
பூமியில் வாழ வழியில்லை
ஒரு வாய் சோறு உண்டதில்லை
தெருவில் படுத்தாலும் கேட்க நாதியில்லை
முகத்தில் அழுக்கு தவிர வேறேதுமில்லை
அகத்தில் அன்பை தவிர வேறேதுமில்லை
பசிச்சாலும் கேட்க வாய் இல்லை
பதறினாலும் ஓட கால் இல்லை
இதை பார்த்தும்
அவன் மனம் இறங்குவதில்லை
தெய்வமே என்று
இரு கை தூக்கி வெளிய நான் இங்கு பிச்சை எடுக்கிறேன்
கடுவுளே என்று
இரு கை தூக்கி உள்ளே அவன் அங்கு பிச்சை எடுக்கிறான்
பாவம்
அவனுக்கு தெரியாது
சொந்த காலில் நின்றாலும்
அடுத்தவன் காலை
நம்பித்தான் வாழவேண்டும் என்று...
பிச்சைக்காரன் கதாபாத்திரம்
வென்றான் ஆறு கோடி
பிச்சைக்காரன் வாழ்கை பாத்திரம்
நின்றேன் தெரு கோடி
அறிய சாதனை நிலாவில் சோறு
அறியா சோதனை கிடைக்காத நிலாச்சோறு...
பிறர் கைகளை எதிர்பார்க்கும்
ஒவ்வொரு பணக்காரனும் பிச்சைக்காரன் தான்...
பிச்சை என்று சொல்லி
மனதால் நோகடிக்காமல்
மானமுள்ள மனிதனாக இருந்தால்
உதவி என்று சொல்லி உதவி செய்...
-ஜ.கு.பாலாஜி-