முத்தம் முத்தம் என் மேலே விழ வேண்டும்

முத்தம் முத்தம் என் மேலே விழ வேண்டும்
சத்தம் நித்தம் உன்னாலே விழ வேண்டும்
என் வார்த்தை எல்லாம் உன் உதடினிலே
நான் வாழ்வேன் உன் உறவினிலே
இவன் போதும் பூமியிலே என்
ஜீவன் வாழும் காதலிலே
முத்தம் முத்தம் என் மேலே
சத்தம் நித்தம் உன்னாலே

நீ வீசும் காதல் கோர்த்து நெய்வேன்
அன்பே புது பொன்னாடை
நீ ஏங்கும் நேரத்தில்
உனை நீங்கா என்னாடை
நெஞ்சோரத்தில் எப்போதும் உன்
சுவாசம் சேர்த்து நிற்பேன்
கண்ணோரத்தில் காதல் கோர்த்து
உன் மடியில் விழ்பேன்
இவள் போதும் பூமியிலே என்
ஜீவன் வாழும் காதலிலே

கண்ணும் கண்ணும் சேரும் முன்னே
காதல் கரண்டாய் இழுக்கிறதே
பகல் இரவு தெரியாமல்
பஞ்சாய் இன்று நெஞ்கம் பறக்கிறதே
உன்னாலே நான் அறிந்தேன்
உனக்காக அந்தரங்கம் திறந்தேன்
உன் தோட்டத்தில் புது
விதையாக நான் இன்று எனை கண்டேன்
இவன் போதும் பூமியிலே என்
ஜீவன் வாழும் காதலிலே

முத்தம் முத்தம் என் மேலே விழ வேண்டும்
சத்தம் நித்தம் உன்னாலே விழ வேண்டும்

எழுதியவர் : கிருஷ்ணா (19-Sep-16, 11:50 am)
சேர்த்தது : krishna puthiran
பார்வை : 86

மேலே