மயக்க காதல்
எங்கிருந்தோ வந்தான்
என்னை கண்டுகொண்டான்
என் மனம் கவர்ந்து சென்றான்
காதல் என்பது இது தானா
என்று தனிமையில் அதை உணர்ந்தேன் நான்
என்ன என்று நான் அறியேன்
என்ன மாய மணாளனே
என் மனதுடன் என் உயிரையும்
உன்னிடம் தொலைத்து விட்டேன்
அதை உன் இதயத்தில் ஆழத்தில்
நீ பூட்டி விட்டாய் அந்த காதல்
உனக்கே உனக்கு மட்டும்தான்
என்று உனக்கு நான் உறுதி அளிக்கின்றேன்
திருப்பி தந்துவிடு என் உயிரை
உன் காதலில் தோய்த்து
வந்து அது என் இதயத்தில் புகுந்து
நம் காதலாய் என் இதயத்தை
மீண்டும் இயக்க விடு
நீயும் வந்து சேர்ந்து விடு-நம்
காதல் நம்மை வாழவைக்கும்