மீன் வேட்டை

மீன் பிடிக்க போகலாமா?
என குட்டிம்மா அழைத்தாள்
இந்த இரவு நேரத்தில் எங்கே?
என வியப்புடன் கேட்டேன்
வாயில் ஒற்றை விரலை வைத்து
சத்தம் போடாதீங்க என
சைகை செய்தவாறே
என்னிடம் அவளை
பின்தொடருமாறு சைகை செய்தாள்!
பூனை நடைப்போட்டு
இருவரும் வீட்டின்
வெளியே வந்தோம்...
சுற்றுமுற்றும் பார்த்தவள்
தண்ணீர் நிரம்பியிருந்த
வாளியருகே அழைத்துச் சென்றாள்
அந்த தண்ணீரில் தத்தளித்த
விண்மீன்களை பிடி என சொன்னாள்!
எனக்கு வியப்பு மேலிட்டது
இரவு நேரத்தில்
விண் மீன் வேட்டையா என?
அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது!

எழுதியவர் : புஷ்பராஜ் ராமகிருஷ்ணன் (19-Sep-16, 5:38 pm)
Tanglish : meen vetai
பார்வை : 102

மேலே